தினமும் 11 மணிநேரம் அமர்வது உயிருக்கு ஆபத்து.
Page 1 of 1

அலுவலகத்தில் வேலை பார்ப்பது, தொலைக்காட்சி, கணணி முன்பு செலவிடுவது என ஒரு நாளைக்கு 11 மணி நேரத்திற்கும் மேல் உட்கார்வது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைகழக மூத்த ஆராய்ச்சியாளர் ஹிட்டி வாண்டர் பிளாக் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தினார். 45 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் 2.22 லட்சம் பேரிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆராய்ச்சியின் முடிவில் தெரியவந்த தகவல்கள் பின்வருமாறு: அலுவலகத்தில், தொலைக்காட்சி, கணணி முன்பு என தினமும் 11 மணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்தே இருப்பவரா நீங்கள்? இன்னும் 3 ஆண்டுகளில் திடீர் மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
அதிக நேரம் உட்கார்ந்து விட்டு, மற்ற நேரத்திலும் உடற்பயிற்சிகள் இல்லாமல், ஒழுங்கான டயட்டும் இல்லாமல் இருந்தால் இந்த ஆபத்துக்கான வாய்ப்பு இரட்டிப்பு. அதற்காக அதிக நேரம் உட்கார்வது ஆட்கொல்லி என்று ஒரேயடியாக சொல்லிவிட முடியாது. அதிக நேரம் உட்கார்வதற்கும் வாழ்நாள் குறைவதற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்று சொல்லலாம்.
நன்கு ஆரோக்கியமாக வாழ்வதற்கும், இதய நோய்கள், சர்க்கரை, அதிக பருமன் போன்ற நோய்கள் தாக்காமல் இருப்பதற்கும் உட்காரும் நேரத்தை குறைப்பது மிகமிக அவசியம். முடிந்தவரை நில்லுங்கள், அதிகம் நடந்து செல்லுங்கள். மற்ற நேரங்களிலும் உடற்பயிற்சி, மற்ற வேலைகள் செய்வது என சுறுசுறுப்பாக இருங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அதிக நேரம் அமர்வது உயிருக்கு ஆபத்து
» தினமும் மாத்திரை சாப்பிடாவிட்டால் அஞ்சலி உயிருக்கு ஆபத்து: சித்தி பரபரப்பு பேட்டி
» எடை குறைப்பில் அஜித்…! தினமும் 5 மணிநேரம் ஜிம்மில் உடற்பயிற்சி!!
» குறைவாக தூங்கினால் உயிருக்கு ஆபத்து
» உயிருக்கு உலை வைக்கும் கைத்தொலைபேசி.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum