உடல் மெலிந்தவர்கள் குண்டாக வேண்டுமா? இதைப் பாருங்கள்.
Page 1 of 1

அழகு விஷயத்தில் பிரச்சினை இல்லாதவர்களே இல்லை. அதற்காக விலை உயர்ந்த அழகு சாதனங்களை முகத்தில்... உடலில் வைத்து தேய்க்க வேண்டிய அவசியமில்லை. முதலில் அழகு என்பது மனசை பொறுத்ததுதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மனசு நன்றாக இருந்தால் புன்னகை முகமாக... எல்லோரையும் வசீகரிக்கும் முகமாக... அழகாக மாறிவிடும்.
அழகுக்கு எதிராக இருப்பது மன அழுத்தம் மட்டுமே... மன அழுத்தம் ஏற்படாமல் தவிர்க்க வேண்டும். எப்போதுமே மனதும், உடலும் குளிர்ச்சியாகும் விதத்தில் நன்றாக குளிப்பது நல்லது. உடம்பில் எண்ணை தேய்த்து குளித்தாலும் உடலும், மனதும் குளிர்ச்சியடையும்.
தினமும் எண்ணை தேய்த்து குளிப்பது இளநரையை தடுக்கும். மேலும் வாத நோய்களை போக்கும். உடம்புக்கும் புத்துணர்வு கிடைக்கும். சருமத்துக்கும் மெருகு கூடும். உடலுக்கு ஆரோக்கியமும் ஏற்படும். அதுமட்டுமின்றி நமது உடம்பில் சேரும் விஷத் தன்மைகளையும் நீக்கும். ஒவ்வொருவரின் உடல்வாகுக்கு தகுந்தாற்போல் எந்த எண்ணையை தேய்த்து குளிக்கலாம் என்பதை ஆயுர்வேதம் கூறுகிறது. அதை அறிந்து உங்களுக்கேற்ற எண்ணையை தேய்த்துக் குளிக்கலாம்.
இன்றைக்கு சோப்பு போட்டு குளிக்காத மனிதர்களே இல்லை என்று சொல்லலாம். சோப்பு இல்லை என்றாலும் அந்த தன்மை உடைய ஷாம்புவோ அல்லது பவுடரோ தேய்த்தும் குளிக்கின்றனர். அதற்கு பதிலாக தேன், பால், கற்றாழைச்சாறு கலந்த கலவையை உடலில் தேய்த்துக் குளிக்கலாம்.
இது அழகு தருவதோடு... உடம்பில் உள்ள அழுக்கையும் நீக்கிவிடும். இந்த கலவையை பயன்படுத்த முடியாதவர்கள், சிறுபயறு, கடலை மாவு, தேன் பயன்படுத்தியும் குளித்தால் சருமம் மெருகேறும். அழகு என்றால் அதில் தலைமுடிதான் மிக முக்கியமாக கருதப்படுகிறது. அதற்காக இப்போதெல்லாம் டை அடிக்கின்றனர் பலர்.
டை அடிப்பதற்கு பதிலாக 100 கிராம் மருதாணி தூள், 20 கிராம் நெல்லிக்காய் தூள் ஆகியவற்றுடன் சிறிதளவு தண்ர் சேர்த்து ஊற வைக்கவும். காலையில் முடியில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து கழுவினால் அல்லது குளித்தால் நரையை போக்க இது உதவும்.
கண்ணுக்குத் தெரியாத உயிருள்ள பொருள்தான் பொடுகுக்கு காரணம். சீப்பு, டவல் ஆகியவற்றை அடிக்கடி சுடுநீரில் கழுவி பயன்படுத்தவும். அடிக்கடி எண்ணை தேய்த்து தலைமுடியை அலசவும். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடவும். இன்றைக்கு நடுத்தர வயதுள்ளவர்களில் பெரும்பாலும் டை அடிக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் சீக்கிரத்தில் அவர்களுடைய தலைமுடி நரைத்து பஞ்சு மாதிரி ஆகிவிடும்.
இதற்கு காரணம் அமோனியா சேர்த்த டை தான் காரணம். கறுப்பு நிறம் கொடுக்கும் டைகளில் தீமைகள் அதிகம். புதிய முடிகள் ஆரோக்கியமாக வளர்வதை இது தடுக்கும். டைக்கு பதில் கண்மையை பயன்படுத்தி முடியை கறுப்பாக்கலாம். நிறைய காய்கறிகள் சாப்பிடுவோருக்கு சருமம் பளபளப்பாக இருக்கும். இதனால் அவர்கள் எப்போதும் அழகாக இருப்பார்கள். கேரட், கருணைக்கிழங்கு, வெங்காயம், கீரை, புடலங்காய் இதெல்லாம் சாப்பிட்டால் உடல் வனப்பு கூடும்.
உடல் மெலிந்தவர்கள் குண்டாக மாறுவதற்கு பல முயற்சிகளை எடுப்பதற்கு பதில்... 101 நாளில் எளிதாக குண்டாகலாம். 50 கிராம் வெந்தயத்தை வேக வைத்து... அதனுடன் ஒரு மேசைக்கரண்டி நெய், வெல்லம் சேர்த்து.... 101 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் ஈஸ்ட்ரோஜென் அதிகரித்து உடம்பு குண்டாகிவிடும். ஈஸ்ட்ரோஜென்னை அதிகரிக்கும் சக்தி வெந்தயத்துக்கு உண்டு. குண்டான உடம்புடன் கஷ்டப்படுபவர்கள், உடல் மெலிய... 50 கிராம் கொள்ளை வறுத்து... பொடியாக்கி தினமும் சாப்பிடவும். இது உடலில் உள்ள தண்ணீரை நீக்கி உடல் எடையை குறைத்துவிடும். உங்களுடைய உடல் சரியான நிலைக்கு வந்தவுடன் கொள்ளு சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ளலாம். அல்லது தொடர்ந்து சாப்பிட்டாலும் உடலுக்கு நல்லதே.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» உடல் எடையை அதிகரிக்க வேண்டுமா?
» உடல் எடையை அதிகரிக்க வேண்டுமா?
» உங்களுக்கு கருமையான, நீளமான கூந்தல் வேண்டுமா? இதைப் படியுங்கள் .
» ஏழு நாட்களில் உடல் எடை குறைய வேண்டுமா..?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum