பொடுகுத் தொல்லை போயே போச்சு!
Page 1 of 1
பொடுகுத் தொல்லை போயே போச்சு!
இப்போதெல்லாம் வெளிர் பழுப்பு, அடர் பழுப்பு போன்ற நிறங்களில் கல்லூரி மாணவிகள் தங்களின் கூந்தல் நிறத்தை மாற்றிக் கொள்கிறார்கள். அது ஃபேஷனாக இருந்தாலும், முறையான பராமரிப்பின்றி அந்தக் கூந்தல் அதே நிறத்தில் வெளிறிப் போகும்போது ‘செம்பட்டை முடி’ என்றே அழைக்கப்படுகிறது.
‘‘ஜீவனே இல்லாமல் வறண்டு போயிருக்கும் இப்படிப்பட்ட முடியை உடையவர்கள் ‘தங்கள் கூந்தலும் ஒருநாள் அலையலையாய்ப் புரளுமா?’ என்று கவலைப்படுவார்கள். அந்தக் கவலைக்குத் தீர்வு உண்டு.
கூந்தல் பராமரிப்பு
தேங்காயை நன்றாக அரைத்து, பால் எடுத்து, கூந்தலில் தேய்த்து, அரைமணி நேரம் கழித்துத் தலையை அலசுங்கள். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் கூந்தல் பளபளக்கும். குழந்தைகள் நீச்சல் குளத்தில் நீந்தும்போதும்கூட தண்ணீரில் குளோரின் கலந்திருப்பதால் முடி செம்பட்டையாகும். ஒவ்வொருமுறை நீந்தியபிறகும் முடியை நல்ல தண்ணீரில் நன்றாக அலச வேண்டும். தலைக்கு ‘ஷவர் கேப்’ எனப்படுகிற சிறு தொப்பி அணிந்தும் நீந்தலாம். முடி கருகருவென்று வளர்வதில்லை என்பது நிறையப் பேரின் கவலை. இதற்கு சுலபமான சில கை வைத்தியங்கள் உண்டு.
சோற்றுக் கற்றாழையை வெட்டி, வெந்தயத்தை அதன் வெள்ளைப் பகுதியில் தூவி, மூடி வையுங்கள். இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்துப் பார்த்தால் வெந்தயம் நன்கு முளை விட்டு இருக்கும். அந்த வெந்தயத்தை எடுத்து, நிழலில் காயவைத்து, தேங்காய் எண்ணெயில் போட்டு, இந்த எண்ணெயைத் தொடர்ந்து தடவி வந்தால் முடி கருகருவென்று வளரும். இது உடலுக்குக் குளிர்ச்சியும்கூட. சைனஸ், தலைவலி இருப்பவர்கள் மட்டும் இதைத் தேய்க்கக்கூடாது.
அவர்களுக்கான இன்னொரு வைத்தியம் சொல்லட்டுமா?
கறிவேப்பிலையையும் பெரிய நெல்லிக்காயையும் நன்கு அரைத்து வடை மாதிரி தட்டிக் கொள்ளுங்கள். இந்த வடைகளைச் சுத்தமான தேங்காய் எண்ணெயில் போட்டு வெயிலில் இரண்டு வாரம் வையுங்கள். பச்சை நிறத்தில் கிடைக்கிற அந்தத் தேங்காய் எண்ணெயைத் தொடர்ந்து உபயோகித்து வந்தால், கன்னங்கரேலென்ற அழகு கூந்தல் கிடைக்கும்.
பொடுகுத் தொல்லை பெரும் தொல்லை. ஒருநாள் தலையை அலசவில்லையென்றால்கூட அரிப்பெடுத்து, காலி பண்ணிவிடும். இந்தப் பொடுகைக் காலி பண்ண சில டிப்ஸ்..
வசம்பைத் தேங்காய் எண்ணெயில் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலைப்பகுதியில் படும்படி தேய்த்து, ஒரு மணி நேரம் ஊறவைத்து அலசி வந்தால் பொடுகு ஓடிப்போகும். தேங்காய் எண்ணெயுடன் வேப்பம்பூவைக் காய்ச்சி இந்த எண்ணெயைத் தொடர்ந்து தடவி வருவதும் நல்ல பலன் தரும்.
இன்னொரு வழியும் உண்டு. வேப்பிலை, வசம்பு, வால் மிளகு மூன்றையும் நன்கு அரைத்து, மயிர்க்கால் களிலும் தலையிலும் படும்படி, தடவி அரைமணி நேரம் கழித்துத் தலையை அலசுங்கள். ‘‘அட.. இப்போல்லாம் நீங்க தலையில கை வைக்கிறதே இல்லையே..?!’’ என்று அக்கம்பக்கத்துத் தோழிகள் ஆச்சரியப்படுவார்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நடந்தால் சுறுசுறுப்பு விர்ர் கொழுப்பு போயே போச்சு
» உயர் ரத்த அழுத்தம் போயே போச்சு!
» சூடா குடிங்க! ஜலதோஷம் போயே போச்சு!!
» பொடுகுத் தொல்லை பொடுகுத் தொல்லை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum