தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கடுகு மருத்துவ பயன்கள்

Go down

கடுகு மருத்துவ பயன்கள் Empty கடுகு மருத்துவ பயன்கள்

Post  meenu Thu Jan 24, 2013 2:23 pm

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள். ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்டது கடுகு. திரிகடுகம் என்னும் மூன்று மருத்துவ பொருட்களில் முதல் இடம் கடுகிற்குத்தான். அதனால்தான் எல்லா குழம்புகளிலும் கடுகு தாளித்து சேர்க்கிறார்கள். கடுகின் சத்துப் பட்டியலை பார்க்கலாம்......

* கடுகு செடியில் விளையும் ஒரு வகை விதையாகும். இது துருக்கியை தாயகமாகக் கொண்டது. ஆனால் தற்போது கனடா, இந்தியா, சீனா மற்றும் ஐரோப்பிய மண்டலங்களில் மிகுதியாக விளைகிறது. வெள்ளை, கருப்பு மற்றும் பழுப்பு நிறங்களில் கடுகு விளைகிறது.

* கருப்பு கடுகுதான் காரம் மிகுந்தது. வெள்ளை கடுகு என்றழைக்கப்படும் கடுகு வகை கொஞ்சம் மஞ்சள் நிறத்தில் காணப்படும். மற்ற இரண்டு கடுகு வகைகளைவிட சற்று பெரிய விதையாக இருக்கும். காரம் குறைந்தது. பழுப்பு கடுகு வடஇந்தியாவில் விளைகிறது.

* கடுகு விதைகளில் உடலுக்கு அவசியமான எண்ணைச் சத்து உள்ளது. மேலும் சினிகிரின், மைரோசின், எருசிக், ஈகோசெனோக், ஆலிக், பால்மிடிக் போன்ற அத்தியாவசிய அமிலங்களும் நிறைந்துள்ளது.

* கடுகு அதிக கலோரி ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் கடுகில் 508 கலோரி ஆற்றல் கிடைக்கும். எளிதில் வளர்ச்சிதை மாற்றம் அடையும் நார்ச்சத்து உள்ளது. கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றலும், உடல் பருமனை குறைக்கும் ஆற்றலும் கடுகிற்கு உண்டு.

* போலேட்ஸ், நியாசின், தயமின், ரிபோபிளேவின், பைரிடாக்சின், பான்டோ தெனிக் அமிலம் போன்ற 'பி- காம்பிளக்ஸ்' வைட்டமின்கள் இதில் உள்ளன. நொதிகளின் செயல்பாடு, நரம்பு மண்டல செயல்பாடு மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தில் இவை பங்கெடுக்கக் கூடியதாகும். நியாசின் (வைட்டமின் பி-3) ரத்தத்தில் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்கும்.

* கால்சியம், மாங்கனீஸ், தாமிரம், இரும்பு, செலினியம், துத்தநாகம் போன்ற தாது உப்புக்களும் கடுகில் உள்ளது. கால்சியம் எலும்புகளின் உறுதிக்கும், மாங்கனீஸ் சிறந்த நோய் எதிர்பொருளாகவும், தாமிரம், ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும், இரும்பு செல்களின் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் ரத்த அணுக்கள் உற்பத்தியிலும் பங்கெடுக்கின்றன
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum