தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கண்களில் ஏற்படும் கருவளையத்தை தவிர்க்க சில வழிகள்.

Go down

கண்களில் ஏற்படும் கருவளையத்தை தவிர்க்க சில வழிகள். Empty கண்களில் ஏற்படும் கருவளையத்தை தவிர்க்க சில வழிகள்.

Post  ishwarya Mon May 13, 2013 5:36 pm

முகத்தின் அழகைக் கெடுப்பதில் முக்கியமான ஒன்று தான் கருவளையம் ஆனால் கருவளையம் எதற்கு வருகிறது என்று பலரும் தெரியாமல் இருக்கின்றனர். மேலும் அவற்றை மறைக்க பல அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துகின்றனர்.

குடிக்கும் நீரின் அளவு குறைவாக இருந்தாலும் கருவளையமானது வரும். அதிலும் குறைவான அளவு நீரானது உடலில் இருந்தால், சரியான இரத்த ஓட்டமானது இல்லாமல், கண்களுக்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறைந்து, கண்களில் கருவளையத்தை உண்டாக்கிவிடும்.

ஆகவே ஒரு நாளைக்கு குறைந்தது 5-6 லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும். அதனால் அழகான கண்களை எளிதாக பெறலாம். சூரியக்கதிர்கள் சருமத்தில் அதிகம்படுவதால், நிறமூட்டும் நிறமிகளான மெலனின் உருவாக்கம் அதிகரிக்கிறது.

எந்த இடத்தில் அதிகமான அளவு மெலனின் இருக்கிறதோ, அந்த இடம் கருப்பாக மாறிவிடும். ஆகவே வெளியே செல்லும் போது கண்களுக்கு சன்கிளாஸ் அணிந்து செல்ல வேண்டும். இதனால் கண்களில் சூரியக் கதிர்கள் படுவதைத் தடுக்கலாம்.

உடலிலேயே மற்ற இடங்களை விட, கண்களை சுற்றிள்ள பகுதி மிகவும் மெல்லியது. ஆகவே எந்த ஒரு நிகழ்வு உடலில் நடந்தாலும், அது முதலில் நம் கண்களிலேயே தெரிந்துவிடும். பிரச்சனை வந்தவுடன் ஆராய்வதை விட வரும் முன் காப்பதே சிறந்தது.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum