நவீன சிகிச்சைகள்
Page 1 of 1
நவீன சிகிச்சைகள்
பெண்களுக்கு சுரப்பியில் கோளாறு, சினைப்பையில் நீர்க்கட்டிகள், ரத்தக் கட்டிகள், குழாயில் அடைப்பு, அல்லது நீர் போன்ற பிரச்சினைகள் இருக்கலாம். இதை தவிர கர்ப்பப்பையில் கட்டிகள் அல்லது சதை வளர்ச்சி இருக்கலாம். விஞ்ஞான வளர்ச்சியினால் இவை அனைத்தும் சரி செய்யலாம். ஹிஸ்டரோஸ்கோபி சிகிச்சையினால் பெரும்பாலும் இப்பிரச்சினைகளை 99 சதவீதம் சீராக்கலாம்.
எல்லா குறைபாடுகளுக்கும் சோதனைக் குழாய் சிகிச்சை அவசியம் என்று சொல்ல முடியாது. 90 சதவீதம் குறைபாடுகளை லேப்ரோஸ் கோபி, ஹிஸ்டரோஸ்கோபி சிகிச்சையினால் சரி செய்ய முடியும். இந்த சிகிச்சை ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம் என்கிறார் டாக்டர் ஜெயராணி.
தாய்மை அடையலாம்:
முட்டைப் பையில் உள்ள கட்டிகள், கர்ப்பப்பையில் 10 செ.மீ. கட்டிகள் என்பனவற்றை ஒரு செ.மீட்டர் அளவேயான சிறு துளையிட்டு நீக்கலாம். ஹார்மோனிக் ஸ்கேஸ்பெல், மோர் சிலேட்டர் என்ற அதிநவீன கருவிகளால் சிறிய அளவு ரத்தப் போக்கோடு சிறு துளையையிட்டும் அகற்றலாம்.
தையலே இல்லாமல் ஒரே நாளில் தெம்போடு வலியில்லாமலும் வீட்டிற்குச் செல்லலாம். இரண்டே நாளில் வேலைக்கும் செல்லலாம். டியூப்பில் உள்ள நீர் அடைப்பு இவை இரண்டும் குழந்தை உருவாவதைத் தடுக்கும். இவற்றை இந்த மகத்தான சிறு துளை சிகிச்சையினால் சரி செய்யலாம்.
சரி செய்த பிறகு 90 சதவீதம் பெண்கள் தாய்மை அடைவதற்கு வாய்ப்பு உண்டு. இதை தவிர கர்ப்பப்பையில் சதை வளர்ச்சி இருப்பதால் குழந்தை வளர இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது. ஹிஸ்ட்ரோஸ்கோபி சிகிச்சையினால் இதையும் நீக்கலாம். கட்டிகளையும் நீக்கலாம், நீக்கிய பின் 95சதவீதம் பெண்களுக்கு தாய்மை அடையும் வாய்ப்பு உண்டாகிறது.
கருப்பை நீக்கும் அறுவை சிகிச்சை:
ஹிஸ்டரெக்டமி என்பது கருப்பையை நீக்கும் அறுவை சிகிச்சை. கருப்பை நீக்க அறுவை சிகிச்சை என்பது கருப்பையை முழுமையாகவோ (அதாவது கருப்பையின் முழு அமைப்பில் கருவக அடி மற்றும் கருப்பைக் கழுத்து உட்பட ஒட்டு மொத்த கருப்பையையும் களைதல்) அல்லது பகுதி நீக்கமாகவோ களைதல் ஆகும்.
பொதுவாக அறுவை சிகிச்சைகளிலேயே இந்த கருப்பை நீக்க அறுவை சிகிச்சைதான் அதிகமாக செய்யப்படுகிறது. அமெரிக்காவில் மட்டும் 6 லட்சத்துக்கும் அதிகமாக கருப்பை நீக்கும் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. அதில் 90 சதவீத அறுவை சிகிச்சைகள் தீங்கற்ற, ஆறும் கட்டிகளை அகற்றுவதற்காகவே செய்யப்பட்டுள்ளன.
இந்த சதவிகிதம் தொழில் வளர்ச்சி அடைந்த நாடுகளில் மிக அதிகம் என்பதால் இத்தகைய கருப்பை நீக்கும் அறுவை சிகிச்சைகள் தேவையற்ற காரணங்களுக்காக செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. கருப்பை அகற்றப்பட்ட பெண்கள் அதற்குப் பிறகு குழந்தை பெற்றுக் கொள்ள இயலாது. (கருப்பை குழாய் மற்றும் சினைப் பையை அகற்றும் போது ஏற்படுவதைப் போன்றே) மேலும் ஹார்மோன் அளவில் குறிப்பிட்ட மாற்றம் ஏற்படுகிறது.
இதனால் இந்த அறுவை சிகிச்சை பின்வரும் ஒருசில குறிப்பிட்ட சூழல்களில் மட்டுமே பரிந்துரை செய்யப்படுகின்றது. இனப் பெருக்க மண்டலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் புற்று நோய்கள் (உதாரணமாக சீறுநீரகக் குழாய், கருப்பைக் கழுத்து மற்றும் கருப்பை வாய் போன்ற பகுதிகள்) அல்லது கட்டிகளை குணப்படுத்த மரபுரீதியாக, இனப் பெருக்க மண்டலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
புற்று நோய்கள் தொடர்பான குடும்ப பின்னணியைக் கொண்டுள்ளவர்களுக்கு ஒரே நோய் தடுப்பு சிகிச்சை என்ற அடிப்படையிலும் அல்லது அத்தகைய புற்று நோய் பாதிப்பிலிருந்து மீள்பவர்களுக்கும் தீவிர மற்றும் விடாப்பிடியான இடமகல் கருப்பை அகப்படலம் (கருவகக் குழியின் வெளியே கருப்பை படலம் வளர்தல்) அல்லது கருப்பைச் சுரப்புத் திசுக்கட்டி போன்ற நோய்களுக்கு அறுவை சிகிச்சை அல்லது மருந்து மூலமான சிகிச்சைகள் தோல்வி அடைந்த பிறகு. நார்த்திசுக் கட்டிகளை அகற்ற கருப்பையை நீக்குவது வழக்கமாக இருக்கிறது என்றாலும், இவ்வகை கட்டிகளை குணப் படுத்துவதற்கான மாற்று சிகிச்சைகளையும் மாற்று சிகிச்சை முறைகளில் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் வழங்குகின்றனர்.
கருப்பைக்கு சேதம் ஏற்படாமலே, அறுவை சிகிச்சை மூலம் நார்த்திசுக் கட்டிகளை அகற்றும் மயோமெக்டமி எனப்படும் தசைக் கட்டிநீக்க அறுவை சிகிச்சை கடந்த பல ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்துள்ளது. கருப்பையானது ஹார்மோன் உற்பத்தி தொடர்பான இனப் பெருக்க உறுப்பு ஆகும். இனப் பெருக்க கால கட்டத்தில் பெண்கள் உடலில் தோன்றும் எஸ்ட்ரோஜன் மற்றும் புராஜெஸ்ட்ரான் ஆகியவை சினைப்பைகளில் உற்பத்தியாகின்றன.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» முதுகுவலியை போக்க நவீன சிகிச்சைகள்
» சிறுநீரக கற்களுக்கான சிகிச்சைகள்
» புற்றுநோய்க்கு பொதுவாக சிகிச்சைகள்
» சிறுநீரக கற்களுக்கான சிகிச்சைகள்.
» நவீன கால இந்தியா
» சிறுநீரக கற்களுக்கான சிகிச்சைகள்
» புற்றுநோய்க்கு பொதுவாக சிகிச்சைகள்
» சிறுநீரக கற்களுக்கான சிகிச்சைகள்.
» நவீன கால இந்தியா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum