நிறைய காய்கறி சாப்பிடுங்க!
Page 1 of 1
நிறைய காய்கறி சாப்பிடுங்க!
விதிக்கிற மருத்துவர்கள், காய்கறி சாப்பிட அப்படித் தடை ஏதும் விதிப்பதில்லை. விதவிதமான காய்கறிகள் கிடைக்கிற நாட்டில் பிறந்திருக்கிற நாம் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள்.
அவரை, முருங்கை, தூதுவளங்காய், அத்திக்காய், முள்ளிக்காய், வாழைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு, கொத்தவரங்காய், கத்தரிக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், வெள்ளைப் பூசணி, பீன்ஸ், முட்டைக்கோஸ், காலிபிளவர், பச்சைப் பட்டாணி, தக்காளி, வெள்ளரிக்காய் போன்ற காய்களை மூடிய பாத்திரத்தில் மிதமாக வேக வைத்துச் சாப்பிடுவது நல்லது.
இந்தக் காய்கறிகளில் சிலவற்றைப் பச்சையாகவே சாப்பிடலாம். காய்கறிகளில்தான் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. வெள்ளரிக்காய் கோடை காலத்துக்கு உகந்தது. நமது வயிற்றில் உண்டாகின்ற புளிப்புத் தன்மையைக் கட்டுப்படுத்தும் சக்தியை வெள்ளரி தனக்குள்ளே சேமித்து வைத்திருக்கிறது.
வெள்ளரிக்காய், காரத்தன்மையால் உடலில் உண்டாகின்ற, புளிப்புத் தன்மையால் உடலில் உண்டாகின்ற அசுத்தப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. ரத்த உயிரணுக்களை உற்பத்தி செய்யும் உந்து சக்தியாக உள்ளது. ரத்த உயிரணுக்களின் சேர்க்கையில் மிக அதிகமாக உள்ள உப்புப்பொருளான பொட்டாசியம் குளோரைடு, பொட்டாசியம் பாஸ்பேட் அதிகமாக உள்ள ஓர் அற்புதமான காய் வெள்ளரிக்காய்.
நாம் உட்கொள்ளும் மெத்தியோனின் புரதம், உடலில் ஹோமோசிஸ்டின் என்ற நச்சுப்பொருளாக மாறுகிறது. இது இதயத்தையும், இதயத் துடிப்பையும் பாதிக்கக்கூடியது. ஹோமோசிஸ்டின் நச்சுப்பொருளை வெளியேற்றும் சக்தி வைட்டமின் பி6-ல் உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.
இது அதிகமாக உள்ள பேயன் வாழைப்பழம், ரஸ்தாலிப் பழம், ஆரஞ்சு, திராட்சை, ஆப்பிள், மாதுளை, பேரீச்சை ஆகியவற்றைச் சாப்பிடுவது நல்லது. கேரட், பீட்ரூட், டர்னிப், நூக்கல், உருளைக்கிழங்கு போன்றவறையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். சுண்டல் கடலை, தட்டைப்பயறு, மொச்சைப் பயறு ஆகியவற்றைச் சிறிதளவு வாரத்துக்கு ஒருமுறை சேர்த்துக்கொள்ளலாம்.
நிலக்கடலை, முந்திரி, பாதாம், பிஸ்தா பருப்பு, சாரைப்பருப்பு போன்றவற்றில் கொழுப்புச் சத்து அதி கமாக இருப்பதால் அதிகமாக சாப்பிடக் கூடாது. மாதத்துக்கு ஒரு சில முறை ஏதாவது உணவோடு சிறிதளவு எடுத்துக்கொள்ளலாம். முளை கட்டிய பயறு வகைகளும் நல்லது. காய்கறிகளை சத்து அறிந்து சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம்!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நிறைய காய்கறி சாப்பிடுங்க!
» கர்ப்பிணிகளே, நார்ச்சத்து உணவுகளை நிறைய சாப்பிடுங்க!

» சருமம் பளபளப்பாக பழம், காய்கறி சாப்பிடுங்க!: ஆய்வில் தகவல்
» தண்ணீரில் நிறைய விஷயம் இருக்கு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum