அரிசி உணவைக் கண்டு அஞ்சுகிறீர்களா?
Page 1 of 1
அரிசி உணவைக் கண்டு அஞ்சுகிறீர்களா?
சிலர் தங்களுக்குச் சர்க்கரை வியாதி என்று அறிந்ததுமே ஏக பதற்றமாகி விடுவார்கள். அரிசிச் சோறை கண்ணால் காண்பது கூடப் பாவம் என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள். இது சரிதானா? நமது பிரதான உணவான அரிசியில் மாவுச்சத்து மட்டுமின்றி, புரதம், வைட்டமின்கள், கனிமங்கள், நார்ப்பொருள்களும் உண்டு என்பதே உண்மை.
அதிலும், தீட்டாத சிவப்பு அரிசியிலும், புழுங்கல் அரிசியிலும் இவை அதிக அளவில் உள்ளன. சைவ உணவு மட்டும் உண்பவர்களின் தினசரி புரதத் தேவையின் பெரும் பகுதியை அரிசியே பூர்த்தி செய்கிறது என்பது பலரும் அறியாதது. அரிசிச் சோறை ஒதுக்கிவிட்டு இட்லி, தோசை, புட்டு என்று சாப்பிடுவதில் அர்த்தமில்லை.
இவற்றின் அடிப்படையும் அரிசிதானே? அரிசிச் சோறிலும், மேலே கண்ட பிற உணவுப் பொருட்களிலும் `ஸ்டார்ச்’ தான் உள்ளது. எனவே, அரிசிச் சோறு சாப்பிடுகிறோமா அல்லது அரிசியை மூலப் பொருளாகக் கொண்ட சிற்றுண்டிகளைச் சாப்பிடுகிறோமா என்பது முக்கியமல்ல. முற்றிலுமாக சோறைக் கைவிட வேண்டிய அவசியமுமில்லை.
அரிசிச் சோறு சாப்பிடுகிறோமா, இல்லையா என்பதை விட, எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதுதான் முக்கியமானது. மாவுப்பொருள் உணவுகளான சோறு, இடியாப்பம், புட்டு, தோசை போன்றவற்றின் அளவைக் குறைத்து, குறைத்த அளவுக்கு ஏற்ப நார்ச்சத்து அதிகமுள்ள கீரை வகைகள், காய்கறிகள், பருப்பு, பயறு, சோயா, பழவகைகள் ஆகியவற்றைச் சாப்பிட வேண்டும்.
இவை மெதுவாகச் செரிமானமாகும். விரைவில் மீண்டும் பசிக்காது. உடல் எடையும் அதிகரிக்காது. காய்ச்சலின் போது உடலிலிருந்து சக்தி சூடாக வெளியேறுகிறது. அதை ஈடுசெய்யப் போதிய அளவு போஷாக்கு உணவை உட்கொள்வது அவசியமாகும். சோறு போஷாக்கு அளிப்பது என்பதால் அந்த வேளையில் சோறையே சாப்பிடலாம்.
விருப்பமில்லை என்றால் பால் கஞ்சியாகக் குடிக்கலாம். அல்லது சக்தி அளிக்கும் வேறு உணவுகளை உட்கொள்ள வேண்டும். பலரும் உடல்நலம் குன்றிய நிலையில் குளிர்பானம் வேண்டும் என்று கேட்டுப் பருகுவார்கள். இந்த மென்பானங்களில் இனிப்புத் தவிர்த்த வேறு சத்து எதுவும் இல்லை என்பதால் இவை விருமëபத்தக்கது அல்லது.
எனவே நீங்கள் எந்த நேரத்திலும், எந்த நோயின் போதும் சோறு சாப்பிடலாம். சோறு சாப்பிடுவதால் எந்த நோயும் அதிகரிக்கப் போவதில்லை. அது தீண்டத்தகாத உணவும் அல்ல. ஆனால் அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பார்கள். அதை மட்டும் ஞாபகத்தில் வைத்திடுங்கள்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அரிசி உணவைக் கண்டு அஞ்சுகிறீர்களா?
» உணவைக் குறைத்து உடலை அழகாக்க.. டயட் டிப்ஸ்!
» பிரச்சினைகளைக் கண்டு பயப்படலாமா?
» டாப்சியை கண்டு ஓடும் இயக்குனர்கள்
» ஊடகங்களைக் கண்டு அஞ்சும் யாழ் அரச அதிபர்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum