சத்து நிறைந்த தாய் பால்
Page 1 of 1
சத்து நிறைந்த தாய் பால்
பிறந்த குழந்தையின் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி மிகவும் குறைவாக இருக்கும். சீம்பாலில் அந்த சக்தி அதிகமாக உள்ளது. அந்த சீம்பாலை குழந்தைக்கு கொடுப்பதன் மூலம் அதன் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
அதனால், எளிதில் அந்த குழந்தையை எந்த நோயும் தாக்காது. இதுமட்டுமின்றி, தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாய்க்கும், குழந்தைக்கும் இடையேயான பாசப் பிணைப்பு பலப்படுகிறது.
ஒரு தாயானவள், தனது குழந்தையை மார்போடு அணைத்து பால் ஊட்டும்போது, அந்த குழந்தைக்கு தாயின் அன்பு, அரவணைப்பு, பாசம், பாதுகாப்பு கிடைக்கிறது. இவை ஒரு குழந்தையின் நல்ல மன வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைகிறது. பாலூட்டுவதால் ஒரு குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி தேவையான அளவில் கிடைப்பதுடன், அந்த குழந்தைக்கும், அதன் தாய்க்கும் இடையே ஒரு பாசப்பிணைப்பை ஏற்படுத்துகிறது.
அத்துடன், பாலூட்டுவதால் அந்த தாய்க்கு பிற்காலத்தில் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள், காக்காவலிப்பு போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் பெருமளவில் குறைகின்றன என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள் அந்த ஆராய்ச்சியாளர்கள்.
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் என்னவெல்லாம் நன்மைகள் கிடைக்கின்றன என்கிற கோணத்தில் ஆராய்ச்சியாளர்கள் தங்களது ஆய்வுகளை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சத்து நிறைந்த தாய்ப்பால்
» சத்து நிறைந்த தாய்ப்பால்
» இரும்புச் சத்து நிறைந்த குங்குமப் பூ
» இரும்புச் சத்து நிறைந்த குங்குமப் பூ.
» அதிசய சத்து நிறைந்த ஆப்ரிகாட் பழங்கள் !!!
» சத்து நிறைந்த தாய்ப்பால்
» இரும்புச் சத்து நிறைந்த குங்குமப் பூ
» இரும்புச் சத்து நிறைந்த குங்குமப் பூ.
» அதிசய சத்து நிறைந்த ஆப்ரிகாட் பழங்கள் !!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum