தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரத்த சோகையை தடுக்கும் உணவுகள்

Go down

ரத்த சோகையை தடுக்கும் உணவுகள் Empty ரத்த சோகையை தடுக்கும் உணவுகள்

Post  meenu Thu Jan 24, 2013 1:42 pm

ரத்த சோகை என்பது இந்தியர்களிடையே மிகவும் பரவலாகக் காணப்படும் ஒரு குறைபாடு. ரத்தத்தில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அல்லது ஹீமோ குளோபினின் அடர்த்தி குறை வதே ரத்த சோகை என்று அழைக்கப்படுகிறது. ரத்தத்தின் சிவப்ப ணுக்களுக்குள் இருக்கும் ஒரு புரதம் தான் ஹீமோகுளோபின் இதில் இரும்புச் சத்து இருக்கும்.

இது தான் ரத்தத்தில் ஆக்ஸி ஜனைக் கடத்துகிறது. பெண் குழந்தைகளுக்கு சிறு வயது முதலே அவர்கள் உடல் வளர்ச்சிக்குத் தேவையான சத்தான உணவுகள் இன்றி வளர்கின்றனர். இதனால் அவர்களின் உடல் வளர்ச்சி மாறுபாட்டின் போது அவர்கள் போதிய சத்தின்றி உடல் நலம் குன்றி காணப்படுகின்றனர்.

இதனால் அவர்கள் பூப்பெய்தியவுடன் மேலும் பல பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர் என்கிறார் சென்னையின் பிரபல சித்த மருத்துவர் திருத்தணிகாசலம்.

அவர் மேலும் கூறியதாவது:-

இரும்பு சத்து குறைவினால் அதாவது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறைவதால் உடல் சேர்வடைந்து விடுகிறது. மேலும் பெண்களுக்கு மாத விலக்கு காலங்களில் ஏற்படும் உதிர இழப்பால் எலும்புகள் பலமிழக்கின்றன. ரத்தத் தில் பித்தம் அதிகரித்து ரத்தம் சீர்கேடு அடைந்து தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி மயக்கம் ஏற்படுகின்றது.

மேலும் கர்ப்பப்பை வீக்கம், ஒழுங்கற்ற உதிரப் போக்கு, வெள்ளைப்படுதல் போன்றவை ஏற்படுகிறது. இதனால் ரத்த சோகை அதாவது அனீமியா ஏற்படுகிறது. ரத்த சோகை ஏற்பட பல காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம், ரத்தம் அதிக அளவில் வெளியேறிக் கொண்டே இருப்பது விபத்து தவிர, இதற்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன.

காரணங்கள்:

ரத்த சிவப்பணுக்கள் தொடக்கம் சீராக இல்லாத நிலையில் ரத்த சோகை உண்டாகும். வலுவற்ற, பாதிக்கப்பட்ட எலும்பு மஜ்ஜை யினாலும் ரத்த சோகை உண்டாகும்.

ரத்த சிவப்பணுக்கள் இறந்து போவதால் ரத்த சோகை ஏற்படும். ரத்தம் அதிகம் வெளியேறுவதால், ரத்தம் மாறுபடுதல், வயிற்றில் அல்சர், வயிற்றில் கட்டி, வயிற்றில் வீக்கம், வயிற்றிலோ, குடலிலோ ஏற்படும் புற்று நோய் காரணமாக சில சமயம் தொடர்ந்து ரத்தம் உள்ளே கசியும், வீக்கத்தைக் குறைக்கும் மருத்துகளை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் அவை காலப்போக்கில் வயிற்றில் ரத்த கசிவை ஏற்படுத்தலாம்.

குழந்தையின் பிறப்பின் போது ஏற்படும் ரத்த இழப்பு போன்ற காரணங்களால் ரத்த சோகை பெண்களுக்கு ஏற்படுகிறது. மேலும் இவர்கள் குழந்தை பேறுக்குப்பின் உடல் பலம் இழப்பதால், கை, கால் மூட்டு, இடுப்பு போன்ற இடங்களில் வலி ஏற்படுகிறது.

அறிகுறிகள்:

மயக்கம் அல்லது காரணமில்லாத சோர்வு, சிறிது உணவு சாப்பிட்டவுடன் வயிறு நிறைந்து விட்டது போன்ற உணர்வு, உணவு செரிமானமாகாமல் இருத்தல், உடல் வெளுத்து காணப்படல், முகத்தில் வீக்கம் உண்டாகுதல், நகங்களில் குழி விழுதல், குழந்தைககளுக்கு கண் குவளைகள் மற்றும் நாக்கு வெளுத்து இருத்தல், உடல் நலம் சரியில்லாதது போன்ற உணர்வு, மூச்சு விடுவதில் சிரமம், இதயம் வேகமாகத் துடிப்பது அல்லது தாறுமாறாகத் துடிப்பது, குளிர்ச்சியான சூழலைத் தாங்க முடியாமை. இதெல்லாம் போக தலைவலி, நாக்கு உலர்ந்து, போவது, சுவையுணர்வு பாதிக்கப்படுவது, முழுங்கச் சிரமமாக இருப்பது, உடல் வெளுத்துப் போவது, வாயின் ஓரங்களில் புண் ஏற்படுவது, அதிகம் வியர்ப்பது, கால்களை ஆட்டிக் கொண்டே இருப்பது, கை கால்களில் வீக்கம், வாந்தி போன்ற அறிகுறிகள் சிலருக்கு அரிதாக ஏற்படும்.

சாதாரணமாக ஒரு ரத்த சிவப்பணு 110-120 நாட்கள் வரை உயிரோடு இருக்கும். அதற்கு பிறகு சிதைந்து விடும். ஆனால் சில நோய்களின் காரணமாக ரத்த சிவப்பணுக்கள் மிகச் சீக்கிரமாகவே இறந்து விடும். அப்படி நடக்கும் போது எலும்பு மஜ்ஜைகள் அதிக ரத்த செல்களை உருவாக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன.

அப்படி எலும்பு மஜ்ஜைகளால் அந்த அளவுக்கு ரத்த செல்களை உருவாக்க முடியா விட்டால் ஹீமலோலிசிஸ் என்ற ரத்த சோகை ஏற்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியில் ஏற்படும் குறைபாடு, நோய் தொற்று சில மருந்துகள், நச்சுப் பொருள்கள் ஆகியவற்றால் ஹீமமோசிலிஸ் ஏற்படலாம்.

பிரசவம்:

கர்ப்பமான பெண்களுக்கு ரத்த சோகை இருந்தால் பிரசவத்தின் போதும், அதற்கு பிறகும் பல சிக்கல்கள் ஏற்படலாம், பிரசவத்தின் போது பொதுவாகவே அதிக ரத்த இழப்பு ஏற்படும். ஏற்கனவே ரத்த சோகை நோய் இருந்தால், ரத்த இழப்பு உயிருக்கே ஆபத்தாக முடியும்.

தாய்க்கு ரத்த சோகை இருந்தால் குழந்தை குறை பிரசவத்திலும், குறைவான எடையுடனும் பிறக்கும் வாய்ப்பிருக்கிறது. அந்த குழந்தைகளுக்கும் ரத்த சோகை ஏற்படும் வாய்ப்பிருக்கிறது.

உணவுமுறை:

நோயாளி இரும்பு சத்து இல்லாத உணவுகளை உண்ணும் பழக்க உடையவராக இருந்தால், இரும்பு சத்து அதிகம் இருக்கும் உணவுகளை அவர் சாப்பிட வேண்டும், கீரை, பீன்ஸ், பருப்பு வகைகள், சோயா பீன்ஸ், உலர் திராட்சை ஆகியவற்றில் இரும்பு சத்து அதிகம் இருக்கிறது.

வலிநிவாரணி, வீக்கத்தை குறைக்கும் மருந்துகளாலும், ரத்த சோகை ஏற்படலாம் என்பதால் அவற்றிற்கான மூல காரணத்தை சரி செய்ய வேண்டும். இத்தகைய ரத்த சோகையை போக்க குழந்தைகளுக்கு உணவில் அதிக இரும்பு சத்துள்ள கீரைகளை முருங்கைக்கீரை, அரைக் கீரை, ஆரைக்கீரை, புதினா, கொத்த மல்லி, கறிவேப்பலை, அகத்திக் கீரை, பொன்னாங் கண்ணி கீரை போன்ற கீரைகளையும், திராட்சை, பேரீட்சை, உலர்ந்த திராட்சை பப்பாளி, அத்திப் பழம், மாம்பழம், பலா பழம், சப்போட்டா ஆப்பிள், நெல்லிக்கனி போன்ற பழங்களையும் தினமும், கொடுத்து வருவது நல்லது.

இதனால் ரத்தம் விருத்தி அடைந்து ரத்த சோகை நீங்கும். மேலும் முளைகட்டிய பச்சை பயறு, முந்திரி பருப்பு, உளுத் தங்களி, பாதாம் பிஸ்தா பருப்பு போன்றவை அதிகம் உணவில் சேர்த்து வருவது நல்லது. காய்கறி சாலட்டுகள் அடிக்கடி கொடுப்பது நல்லது.

பெண் குழந்தைகள் பருவ வயது வரையும் அதற்கு பின்பும் மேற்கண்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை நீங்கும் என்கிறார் சென்னை அரும்பாக்கம் ரத்னா சித்த மருத்துவமனைம இயக்குனர் டாக்டர் திருத்தணிகாசலம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum