இடுப்பு வலியை போக்கும் திரிகோணாசனம்
Page 1 of 1
இடுப்பு வலியை போக்கும் திரிகோணாசனம்
da166601-4b6b-40b1-9745-baef1b4ac1ac_S_secvpfசெய்முறை…
கால்களை அகலமாக விரித்து நிற்கவும். இரண்டு கால்களுக்கும் இடையில் அவரவர் உயரத்திற்கு தகுந்தபடி இரண்டு அடி முதல் மூன்று அடிகள் ஒவ்வொரு குதிகாலுக்கும் இடையில் இடைவெளி இருக்கலாம். முதுகுதண்டு வளையாமல் நேராக நிமிர்ந்து நிற்கவும்.
இரண்டு கைகளையும் தோளுக்கு நேராய் பக்கவாட்டில் உயர்த்தி நிறுத்தவும். உள்ளங்களை தரையை பார்த்தவாறு இருக்கும் நிலையில் வைத்துக் கொள்ளவும். இப்பொழுது மூச்சை நன்றாக இழுக்கவும்.
பிறகு மூச்சை மெதுவாக விட்டவாறே இடது கைப்பக்கம் இடுப்பை வளைத்து குனிந்து இடது காலின் கணுக்காலை தொடவும். வலது கை நேராய் வளையாமல் இருக்க வேண்டும். இப்போது தலையைத் திருப்பி வலது கை விரல்களின் நுனியைப் பார்க்கவும்.
இந்த நிலையில் ஏழு முதல் பத்து எண்ணும் வரை இருக்கவும். பிறகு மூச்சை இழுத்துக் கொண்டே நேராய் நிமிர்ந்து கைகளை பக்கவாட்டில் விரித்தபடியான நிலைக்கு வரவும். இதே போல் வலது பக்கமும் செய்ய வேண்டும். இவ்வாறு 5 முதல் 6 முறை செய்ய வேண்டும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இடுப்பு வலியை உண்டு பண்ணும் காரணிகள்!
» இடுப்பு வலியை உண்டு பண்ணும் நோய்கள்
» முதுகு வலியை போக்கும் உடற்பயிற்சி
» திரிகோணாசனம்
» திரிகோணாசனம் திரிகோணாசனம்
» இடுப்பு வலியை உண்டு பண்ணும் நோய்கள்
» முதுகு வலியை போக்கும் உடற்பயிற்சி
» திரிகோணாசனம்
» திரிகோணாசனம் திரிகோணாசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum