ஸ்ரீ நாலாயிர திவ்யப் பிரபந்தம்
Page 1 of 1
ஸ்ரீ நாலாயிர திவ்யப் பிரபந்தம்
விலைரூ.
ஆசிரியர் : எஸ்.ஜெகத் ரட்சகன்
வெளியீடு: வேமன் பதிப்பகம்
பகுதி: ஆன்மிகம்
ISBN எண்:
Rating
★ ★ ★ ★ ★
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
(நான்கு தொகுதிகள்): உரையாசிரியர்: வேமன் பதிப்பகம், 19, நியூ காலனி, ஜோசியர் தெரு, நுங்கம்பாக்கம், சென்னை-34. (பக்கம்: 306+330+220+312).
மயர்வற மதிநலம் உடைய ஆழ்வார்களால் பாடப்பட்ட பாசுரங்களின் தொகுப்பு `நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்' என்று அழைக்கப்படுகிறது. ஷ்ரீமத் நாத முனிகளால் தொகுக்கப்பட்ட இந்நூலுக்கு பலர் உரை எழுதியுள்ளனர். அவர்கள் எழுதியுள்ள உரைகள் மணிப்பிரவாள நடையில் - தமிழும் வடமொழியும் கலந்து அமைந்துள்ளதால், தமிழ் மட்டுமே அறிந்தோர் பொருள் உணர்தல் கடினமாக இருந்தது. அண்மைக் காலத்தில் பலரும் எளிய இனிய தமிழில் இந்நூலுக்கு உரைகள் எழுதி வருகின்றனர்.
இவ்வுரையாசிரியர் 10 ஆண்டுகளுக்கு முன்பே, திவ்வியப் பிரபந்தத்திற்கு நயவுரை எழுதி தமிழகத்தில் பரவ விட்டார்.
அந்நூலில், நம்மாழ்வாரின் திருவிருத்தத்திற்கு அகப்பொருள் பாடல்களால் அமைந்ததால், உரை எழுதவில்லை; ஆனால், தற்போது வந்துள்ள இவ்வுரை நூலில் முழுமையாக உரை எழுதியுள்ளார். முதலாயிரத்தின் முன்பகுதியில் ஆழ்வார்களின் வரலாறு சுருக்கமாகவும், தெளிவாகவும் எழுதப்பட்டுள்ளது (பக்: 10-16)
ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு எளிய நடையில் பழகு தமிழில் உரை எழுதியுள்ளது இந்நூலின் சிறப்பாகும். எடுத்துக்காட்டாக வண்ண மாடங்கள் என்று தொடங்கும் பாசுரத்திற்கு அழகிய மாளிகைகள் நிறைந்த கோட்டியூரிலே அழகிய முடியும், நிறைகுணங்களும் உடைய கண்ணபெருமான் பிறந்த இனிய மனையில் ஆயரும், ஆச்சியரும் அவன் பிறந்த மகிழ்ச்சியால் ஒருவர் மேல் ஒருவர் நறுமண எண்ணெயைப் பூசிக் கொண்டதாலும், மஞ்சள் வண்ணங்களைத் தூவிக் கொண்டதாலும் அவை கலந்த மாளிகையின் முற்றம் சேறாக ஆயிற்று' என்று எழுதியுள்ளார் (பக்:24)
வடசொல் அதிகம் இல்லாத உரையாக இந்நூல் திகழ்கிறது. இந்நூலில் நம்மாழ்வாரின் திருவிருத்தப் பாசுரங்கள் ஒவ்வொன்றுக்கும் அகப்பொருள் தலைப்புகள் கொடுத்து விளக்கியுள்ளது உரையாசிரியரின் மேவிய புலமைக்குச் சான்றாகும் (பக். 91-125)
தமிழ் மொழி அறியாத ஆனால், ஆங்கிலம் அறிந்தவர்கள் இந்நூலின் உரையைச் சுவைக்க, ஸ்ரீராம பாரதியின் ஆங்கில ஆக்கத்தையும், இணைத் துள்ளது நூலுக்கு மேலும் பெருமை சேர்க்கிறது எனலாம். அனைவர் இல்லங் களிலும் இருக்க வேண்டிய அருமையான உரை நூல் இது.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» ஸ்ரீ நாலாயிர திவ்யப் பிரபந்தம்
» தினமும் ஒரு திவ்யப் பிரபந்தம்
» ஸ்ரீ நாலாயிர திவ்விய பிரபந்தம்
» ஸ்ரீ நாலாயிர திவ்விய பிரபந்தம்
» தினம் ஒரு திவ்யப் பிரபந்தம்
» தினமும் ஒரு திவ்யப் பிரபந்தம்
» ஸ்ரீ நாலாயிர திவ்விய பிரபந்தம்
» ஸ்ரீ நாலாயிர திவ்விய பிரபந்தம்
» தினம் ஒரு திவ்யப் பிரபந்தம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum