என்ன பண்ணாலும் வயிறு குறையமாட்டீங்குதா?
Page 1 of 1
என்ன பண்ணாலும் வயிறு குறையமாட்டீங்குதா?
இந்த காலத்தில் உடல் எடைப் பற்றிய பிரச்சனைகள் அதிகம் உள்ளன. சிலர் உடல் எடை அதிகவில்லை என்ற கவலையுடன் இருக்க, மற்றும் சிலருக்கு உடல் எடை குறையாமல் அவஸ்தைப்படுகின்றனர். மேலும் சிலர் உடல் எடை அதிகரிப்புடன் தொப்பையையும் சேர்த்துக் கொண்டு, அவற்றை குறைக்க பெரும் முயற்சி எடுக்கின்றனர். இத்தகைய பிரச்சனைகள் வருவதற்கு காரணம் நமது பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை போன்றவை தான் முக்கிய காரணங்களாக உள்ளன. இருப்பதிலேயே மிகவும் கடினமான ஒரு செயல் என்னவென்றால் தொப்பையைக் குறைப்பது தான். இதனால் உடல் அழகு மட்டும் கெடுவதில்லை, உடலில் நீரிழிவு, இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்றவற்றை வரவழைத்து கெடுத்துவிடுகின்றன.
இவை அனைத்திற்குமே வேறு யாரும் காரணமில்லை, நாமே தான் காரணம். மேலும் அந்த வகையான நோய்கள் வருவதற்கு தொப்பையுடன், ஆரோக்கியமற்ற உணவுகள், அதிக வேலைப் பளு, ஹார்மோன் மாற்றங்களும் ஒரு வகையில் காரணங்கள் தான். அதிலும் இன்றைய அவசர காலத்தில் எந்த செயலையுமே சரியான நேரத்தில் செய்ய முடியாமல், உடலை பாழாக்கிக் கொள்கின்றோம்.
சரியான ஆரோக்கியமற்ற உணவுகள், உடலுக்கு ஒரு நாளைக்கு போதிய சத்துக்கள் கிடைக்காமல் இருப்பது, குறைவான தூக்கம், கெட்ட பழக்கவழக்கங்கள் என இதற்கான காரணங்களைச் சொன்னால் சொல்லிக் கொண்டே போகலாம்.
எனவே என்னவெல்லாம் செய்தால், உடல் எடை அதிகரிக்காமலும், தொப்பை போடாமலும் தடுக்க முடியும் என்பதைப் பற்றி பார்ப்போமா!!!
பழங்கள் மற்றும் காய்கறிகள்
பழங்கள் மற்றும் காய்கறிகளில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆகவே அவற்றை கண்டிப்பாக தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் தினமும் குறைந்தது 4-5 பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும்.
உணவு நேரம்
எந்த வேளையிலும் உணவை தவிர்க்கக்கூடாது. மேலும் அவ்வாறு உண்ணும் உணவையும் சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால், அதிகமான பசியெடுத்து, உண்ணும் உணவும் அதிகமாகிவிடும். பின் உடலில் உள்ள மெட்டபாலிக்கின் அளவு குறைந்து, உடல் எடை குறையாமல், தொப்பை அதிகரித்துவிடும். சொல்லப்போனால், சாப்பிடாமல் இருந்தால் தான், உடலில் தொப்பை ஆரம்பமாகும்.
மனஅழுத்தம்
மனஅழுத்தம் கூட வயிற்றில் கொழுப்புக்கள் சேர்வதற்கு ஒரு காரணம். ஆகவே மனதில் அழுத்தம் ஏற்படாமல் ரிலாக்ஸ் ஆக இருப்பதற்கு யோகா, தியானம் போன்றவற்றை செய்வது நல்லது.
உறக்கம்
போதுமான உறக்கமும் வயிற்றில் உள்ள கொழுப்புக்களை குறைப்பதற்கு உதவும். எப்படியெனில் போதுமான தூக்கம் இல்லாவிட்டால், உடலில் உள்ள மெட்டபாலிசம் குறைய ஆரம்பிக்கும். பின் அந்த நேரத்தில் நாம் எந்த உணவை உண்டாலும், அவற்றை உடலானது முற்றிலும் உறிஞ்சி, உடல் எடையை அதிகரித்துவிடும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» என்ன பண்ணாலும் வயிறு குறையமாட்டீங்குதா?
» வயிறு படுத்தும்பாடு
» சாப்பிட்டதுக்கு அப்புறம் வயிறு வலிக்குதா?
» உங்கள் குழந்தைக்கு வயிறு உப்புசமா
» வயிறு எரிச்சல் குறைய
» வயிறு படுத்தும்பாடு
» சாப்பிட்டதுக்கு அப்புறம் வயிறு வலிக்குதா?
» உங்கள் குழந்தைக்கு வயிறு உப்புசமா
» வயிறு எரிச்சல் குறைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum