மாரடைப்பை தடுக்க உதவும் திராட்சை!
Page 1 of 1
மாரடைப்பை தடுக்க உதவும் திராட்சை!
இதயத்திற்கு இதமான பொருட்களின் வரிசையில் சமீபத்தில் சேர்ந்திருக்கிறது திராட்சை பழச்சாறு. அமெரிக்க இதயநோய் நிபுணரான ஜான் ஃபோல்ட்ஸ் என்பவர் திராட்சை பழச்சாறுக்கு, ரத்தம் உறைதலைத் தடுக்கும் ஆற்றல் உள்ளதாகக் கண்டறிந்துள்ளார்.
பொதுவாக மாரடைப்பால் மரணம் ஏற்படுவதற்கு இதயக் குழாய்களில் ரத்தம் உறைதலே காரணம். ரத்தம் உறையாமல் இருக்க, ‘பிளாவனாய்டு’ என்ற வேதிப்பொருள் உதவுகிறது. ரத்தத் தட்டுகள் ஒன்று சேருவதை பிளாவனாய்டு தடுப்பதால், மாரடைப்பு ஏற்பட வாய்ப்பில்லை. எனவேதான் பிளாவனாய்டு கலந்த ஆஸ்பிரின், இதயநோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது
இத்தகைய உயிர்காக்கும் பிளாவனாய்டுகள் திராட்சையில் ஏராளமாக உள்ளதால், மாரடைப்பு மற்றும் பிற இதய நோய்களைத் தடுப்பதில் திராட்சை பெரும் பங்காற்றுமென ஜான் போல்ட்ஸ் தெரிவிக்கிறார். இதய நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் ஆஸ்பிரின் அளவைக் குறைத்து திராட்சை ரசம் அருந்தக் கொடுக்கலாமென அவர் பரிந்துரைக்கிறார்.
பொதுவாக திராட்சை ரசத்தில் தயாராகும் ஒயினில் இந்த பிளாவனாய்டு அதிகம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், போதை தரும் ஒயினை ஒரு மருந்தாகப் பரிந்துரைக்க முடியாத நிலை இருந்தது. இப்போது திராட்சை ரசத்தில் அதே அளவு பிளாவனாய்டு இருப்பது தெரிய வந்துள்ளதால், தாராளமாக அது ஆஸ்பிரினின் இடத்தைப் பிடிக்கலாம். காதல் ரசத்தால் பலவீனப்பட்ட இதயத்தை, இனி திராட்சை ரசத்தால் பலப்படுத்தலாம்!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» புற்றுநோயை தடுக்க உதவும் திராட்சை!
» மாரடைப்பை தடுக்கும் திராட்சை!
» மாரடைப்பை தடுக்கும் திராட்சை!
» திராட்சை திராட்சை
» மாரடைப்பை தவிர்க்கும் வழிகள்
» மாரடைப்பை தடுக்கும் திராட்சை!
» மாரடைப்பை தடுக்கும் திராட்சை!
» திராட்சை திராட்சை
» மாரடைப்பை தவிர்க்கும் வழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum