மீன் சாப்பிட்டால் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு நல்லது
Page 1 of 1
மீன் சாப்பிட்டால் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு நல்லது
கர்ப்பிணிப் பெண்கள் மீன் வகை உணவுகளை சாப்பிட்டால், பிறக்கும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும் என, மருத்துவ ஆய்வில் தெரிய வந்துள்ளது. இங்கிலாந்து நாட்டின் மெட்ரோ பாலிட்டன் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் தேசிய நலவாழ்வு மையமும் இணைந்து, கர்ப்பிணிப் பெண்கள் குறித்து ஆய்வை மேற்கொண்டன.
இதற்காக 11 ஆயிரத்து 875 கர்ப்பிணிப் பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.இதன் முடிவில், மீன் வகை உணவுகளை அதிகம் சாப்பிட்ட, கர்ப்பிணிகளுக்கு பிறக்கும் குழந்தைகள் அதிக மூளை வளர்ச்சியுடனும், மூளை சம்பந்தமான நோய்கள் தாக்காமலும் இருக்கும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
கர்ப்ப காலத்தில், அதிகமாக மீன் உணவு சாப்பிடும் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள் அதிக புத்திக் கூர்மையுடன் பிறக்கும். அந்த குழந்தைகள் வயிற்றில் இருக்கும் போது, மூளை தொடர்பான நோய்கள் தாக்குவது குறைவாக இருக்கும்.
குழந்தைகளின் மூளையும் சிறப்பாக வளர்ச்சி அடையும். இந்த ஆய்வானது கர்ப்பிணிகளிடமும், அவர்களுக்கு குழந்தை பிறந்த பின்பும் தொடர்ந்து நடத்தப்பட்டது. அதில், கர்ப்ப காலத்தின் போது அதிக மீன் உணவுகளைச் சாப்பிட்ட தாய்மார்களின் குழந்தைகள், அதிக புத்திக் கூர்மையும், அவர்களது கை மற்றும் கண் இணைந்து செயல்படுவதும், தகவல் தொடர்பும் மிகச் சிறப்பாக இருப்பதும் தெரியவந்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம், குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு காரணமான, "ஒமேகா -3 பாட்டி ஆசிட்' மீன்களில் அதிகமாக இருப்பது தான். கர்ப்பிணிப் பெண்களின் 32 வார கர்ப்ப காலத்தில், 340 கிராமிற்கு குறைவாக மீன் உட்கொண்ட கர்ப்பிணிகளின் குழந்தைகளின் புத்திக் கூர்மை சற்று குறைவாகவே இருந்தது.
அதேநேரம் குழந்தைகளின் உடம்பில், "ஒமேகா -3 பாட்டி ஆசிட்' அளவுக்கு அதிகமாக இருந்தால், குழந்தைகளின் புத்திக் கூர்மை மழுங்கவும் வாய்ப்புள்ளது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கர்ப்பிணிகள் முட்டை சாப்பிட்டால் குழந்தையின் மூளைக்கு நல்லது
» குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் தாய்ப்பால்!
» மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் மீன் உணவு
» மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் மீன் உணவு
» மூளை வளர்ச்சிக்கு உதவும் தாய்ப்பால்
» குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் தாய்ப்பால்!
» மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் மீன் உணவு
» மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் மீன் உணவு
» மூளை வளர்ச்சிக்கு உதவும் தாய்ப்பால்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum