கர்ப்ப காலத்திலும், தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் கவனிக்க வேண்டியவை
Page 1 of 1

கர்ப்ப காலத்தில், உடல் செயற்பாட்டிற்கு அதிக அளவு ஊட்டச்சத்து தேவை. வயிற்றில் உள்ள குழந்தையின் தேவையைப் பூர்த்தி செய்ய கூடுதல் உணவு அவசியம். பெண்கள் கர்ப்ப காலத்தில் உடலில் உள்ள கொழுப்பை அதிகப்படுத்தி, தேவைப்படும் ஊட்டச்சத்தை பூர்த்தி செய்கின்றனர்.
பால் கொடுக்கும் பெண்களுக்கு, அதிக அளவு பால் சுரக்கவும், உடல் நலனைக் காக்கவும் கூடுதல் உணவு தேவை. இரும்பு சத்து நிறைந்த உணவை உட்கொள்வது அவசியம் . ஹீமோகுளோபின் உற்பத்தி, மூளை செயல்பாடு மற்றும் உடல் எதிர்ப்பு சக்திக்கு இரும்புச்சத்து தேவைப்படுகிறது.
இரும்புச் சத்து பற்றாக்குறையினால் இரத்த சோகை ஏற்படுகிறது. பெரும்பாலும், கர்ப்பிணி பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் இரும்புச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. இரும்புச் சத்து பற்றாக்குறையினால் மகப்பேறு காலத்தில் உயிர் இழப்பு ஏற்படுகிறது.
மேலும் குழந்தைகளின் எடை குறைகிறது. குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. பயறுகள், உலர் பழங்கள் மற்றும் பச்சைக் கீரைகளில் அதிக அளவு இரும்புச் சத்து உள்ளது. மாமிசக் கறி, மீன், கோழிக் கறி போன்றவற்றிலும் இரும்புச்சத்து உள்ளது.
தாவரங்களில் குறைவான அளவு இரும்புச்சத்து கிடைக்கிறது. ஆனால் மாமிச உணவுகளில் அதிகமாக உள்ளது. வைட்டமின் 'சி' அதிகமுள்ள பெருநெல்லி, கொய்யா, ஆரஞ்சு வகை பழங்கள் ஆகியன, தாவரங்களில் உள்ள இரும்புச்சத்தை கிடைக்கச் செய்கின்றன.
* உணவுகளில் அதிகமாக முழு தானியங்கள், முளைக்கட்டிய தானியங்கள், பால், மாமிசம், முட்டை ஆகியவற்றை உட்கொள்ளவும்.
* அதிக அளவு காய்கறிகள், பழங்கள் சாப்பிடவும்.
* மூடபழக்கவழக்கங்களையும் எண்ணங்களையும் தவிர்க்கவும்.
* மதுபானங்கள் மற்றும் புகையிலை உபயோகிக்கக் கூடாது.
* பரிந்துரையின்படி மட்டும் மருந்துகள் உட்கொள்ளவும்.
* 14-16 வார கர்ப்பத்தில், இரும்பு, போலியேட் மற்றும் கால்சியம் நிறைந்த உணவை குழந்தை பிறந்த பின் தாய்பால் கொடுக்கும் பொழுதும் தொடர வேண்டும்.
கர்ப்பிணி பெண்களுக்கு அதிக அளவு போலிக் அமிலம் தேவை. போலிக் அமிலம் பிறக்கும் குழந்தையின் எடையை அதிகரிப்பதோடு, பிறப்பு குறைகளையும் குறைக்கிறது. பச்சைக் காய்கறிகள், பயறுகள், ஈரல் ஆகியவற்றில் அதிக அளவு போலிக் அமிலம் உள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கர்ப்ப காலத்திலும், தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் கூடுதல் கவனிப்பு அவசியம்
» நடைபயிற்சியில் கவனிக்க வேண்டியவை....
» உடற்பயிற்சியில் கவனிக்க வேண்டியவை.
» குதிகால் செருப்பணிந்தவர்கள் கவனிக்க வேண்டியவை
» ரத்தசோகை - கர்ப்பிணிகள் கவனிக்க வேண்டியவை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum