தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆரோக்கிய வாழ்வு

Go down

 ஆரோக்கிய வாழ்வு Empty ஆரோக்கிய வாழ்வு

Post  gandhimathi Thu Jan 24, 2013 1:15 pm

அமிர்தா இன்ஸ்டிட்யூட் ஆப் மெடிக்கல் ஸயன்ஸ்& ரிசர்ச் சென்டர் ( AIMS)
1400 படுக்கை வசதியுடன் கூடிய அதிநவீன சிறப்பு மருத்துவமனை எர்ணாகுளத்தில் செயல்பட்டு வருகிறது. இதுவும் அதன் கிளைகளும் இதுவரை சுமார் ஏழரை லட்சம் பேருக்கு 34 மில்லியன் டாலர்கள் பெறுமானமுள்ள மருத்துவ சிகிச்சையை இலவசமாக அளித்துள்ளது. இதய அறுவை சிகிச்சை அளிப்பதில் ஆசியாவில் தலைசிறந்து விளங்கும் மருத்துவ மனைகளில் இது ஒன்றாகும். இங்கு ஒரு மருத்துவக் கல்லூரியும் உள்ளது.

Amrita Hospital

அமிர்த கிருபா இலவச மருத்துவமனை – அமிர்தபுரி
அமிர்தபுரி ஆசிரமத்திற்கு அருகிலுள்ள இந்த இலவச சிகிச்சை மையத்தில் அருகிலுள்ள ஆயிரக்கணக்கான ஏழை மீனவக் குடும்பங்களுக்கும் ஆசிரமத்திற்கு வரும் பக்தர்களுக்கும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரமவாசிகளுக்கும் சிகிச்சை அளிக்கப் படுகிறது. ஒவ்வொரு மாதமும் ஏறத்தாழ 10,000க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

எர்ணாகுளத்தில் ஞாறக்கல் என்ற இடத்திலும், மைசூர், மானந்தவாடி , அந்தமான் ஆகிய இடங்களிலும் இது போன்ற மருத்துவமனைகள் செயல்பட்டு வ்ருகின்றன.

அமிர்த கிருபாசாகர்
இது பத்லாபூரில் ( மகாராஷ்டிரா ) அமைந்துள்ளது. அமிர்த கிருபாசாகர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறுதிக் கட்டத்தை அடைந்த நோயாளி களுக்கு புகலளிக்கும் இடமாகும். அவர்களுக்கு அன்புடன் சேவை செய்வதுடன், சிறப்பான சிகிச்சையும் இலவசமாக இங்கே வழங்கப் படுகிறது.

எய்ட்ஸ் மையம் ( திருவனந்தபுரம்)
ஒரு காட்டை ஒட்டிய மூன்று ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இல்லத்தில் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. அத்துடன் புற்றுநோயாளிகளுக்கும் இங்கு வலியைக் குறைக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஆயுர்வேத மருத்துவமனை
அமிர்தபுரி ஆசிரமத்தில் மடம் நடத்திவரும் ஆயுர்வேத மருத்துவமனை உள்ளது. ஆசிரமவாசிகள் பாரம்பரிய முறைப்படி மருந்துகள் தயாரிக்கிறார்கள். ஏழைகளுக்கு இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது. பஞ்சகர்மா, எண்ணெய்க் குளியல் போன்ற சிகிச்சை வசதிகளும் உண்டு.vv
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum