தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கத்தரிக்காய் புலாவ் – சமையல் குறிப்பு

Go down

கத்தரிக்காய் புலாவ் – சமையல் குறிப்பு Empty கத்தரிக்காய் புலாவ் – சமையல் குறிப்பு

Post  ishwarya Fri May 10, 2013 5:46 pm

தேவையானப் பொருட்கள்:

பாசுமதி அரிசி – 250g

கத்தரிக்காய் – 200g
தக்காளி – 3
பூண்டு – 6பல்
பட்டை, கிராம்பு, சோம்பு – சிறிதளவு
மிளகாய் தூள், கரம் மசாலா தூள் – சிறிதளவு
வெங்காயம், மிளகாய், கருவேப்பிலை – தாளிப்பதற்கு
கொத்துமல்லி இலை – சிறிது
உப்பு – தேவையான அளவு

செய்முறை: பாசுமதி அரிசியை வேக வைத்து உதிரியாக வடித்துக் கொள்ளவும். கத்தரிக்காயை நீளவாக்கில் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து 50 மில்லி எண்ணெய் ஊற்றி அதில், பட்டை, கிராம்பு, சோம்பு போட்டு தாளிக்கவும்.

பின் தக்காளி, வெங்காயம், மிளகாய் மற்றும் கருவேப்பிலையும் சேர்த்து வதக்கவும். அதனுடன் நறுக்கி வைத்துள்ள கத்தரிகாயை போடவும். அதன் பின் தேவையான அளவு உப்பு மிளகாய்தூள், மற்றும் கரம் மசாலாவை சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.

கத்தரிக்காய் வெந்தவுடன் கொத்து மல்லி இலைகளை, தூவி இறக்கவும். இதனுடன் சாதத்தை சேர்த்துக் கிளறவும் அவ்வளவுதான் ருசியான கத்தரிக்காய் புலாவ் தயார். சாதத்துடன் சிறிது நெய் சேர்த்தால் கூடுதல் சுவையாக இருக்கும்.




ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum