சன்டே ஸ்பெஷல்!!! ருசியான…சிக்கன் நெய் ரோஸ்ட்
Page 1 of 1
சன்டே ஸ்பெஷல்!!! ருசியான…சிக்கன் நெய் ரோஸ்ட்
ஞாயிற்றுக்கிழமை வந்தாலே ஒரு குஷியா தான் இருக்கும். ஏனெனில் அப்போது தான் வாய்க்கு ருசியாக, நிம்மதியாக சாப்பிட முடியும். அப்படி ருசியான, காரசாரமான, கொஞ்சம் வித்தியாசமான முறையில் சிக்கனை வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்து, நல்ல பேரை வாங்கணும்-னு ஆசைபடுறீங்களா? அப்படின்னா அதுக்கு ருசியான சிக்கன் நெய் ரோஸ்ட் தான் சரி!!! அது எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள் :
சிக்கன் – 750 கிராம்
தயிர் – 1/2 கப்
மிளகுத்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
எலுமிச்சைசாறு – 3 டீஸ்பூன்
நீள வரமிளகாய் – 75 கிராம்
சின்ன வரமிளகாய் – 25 கிராம்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
புளி – சிறிது
எண்ணெய் – தேவையான அளவு
நெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – தேவையான அளவு
செய்முறை :
முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். பிறகு அந்த சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதோடு தயிர், மிளகுத்தூள், மஞ்சள் தூள், எலுமிச்சை சாற்றை சேர்த்து நன்கு பிரட்டி, ஃப்ரிட்ஜில் 6-8 மணிநேரம் ஊற வைக்கவும்.
பிறகு ஒரு வாணலியில் நீள வரமிளகாய், சின்ன வரமிளகாய், வெந்தயம், சீரகம், பூண்டு பேஸ்ட், புளி ஆகியவற்றை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அதனை சூடு போகும் வரை காய வைத்து, மிக்ஸியில் அவை அனைத்தையும் போட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, சிக்கனை பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.
அடுத்து மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி உருகியதும், அரைத்த அந்த பேஸ்டை போட்டு நன்கு வதக்கவும். பின் அதில் வறுத்த சிக்கனை சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து, தீயை சிம்மில் வைத்து, 3 நிமிடம் மூடி போட்டு வேக விடவும்.
பின்னர் அதனை இறக்கி அதில் கொத்தமல்லியை நறுக்கி மேலே தூவி இறக்கவும். இப்போது சுவையான சிக்கன் நெய் ரோஸ்ட் ரெடி!!!
Share

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சன்டே ஸ்பெஷல்!!! ருசியான...சிக்கன் நெய் ரோஸ்ட்
» இன்றைய சன்டே ஸ்பெஷல்!!! தவா சிக்கன்
» தீபாவளி ஸ்பெஷல் நெய் அதிரசம்
» இன்றைய சன்டே ஸ்பெஷல்!!! இறால் மசாலா
» ருசியான...சிக்கன் ஹலீம்
» இன்றைய சன்டே ஸ்பெஷல்!!! தவா சிக்கன்
» தீபாவளி ஸ்பெஷல் நெய் அதிரசம்
» இன்றைய சன்டே ஸ்பெஷல்!!! இறால் மசாலா
» ருசியான...சிக்கன் ஹலீம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum