பெண்மையின் சில உண்மைகள்
Page 1 of 1
பெண்மையின் சில உண்மைகள்
சிறுமிகள் பொதுவாக 11 முதல் 13 வயதுக்குள் பூப்படைந்து விடுவார்கள். சிலர் இந்த வயதைக் கடந்தும் பருவம் எய்துவதுண்டு. பெண் பருவம் அடைவது என்பது ஒரு சில நாட்களில் ஏற்படும் நிகழ்வு அல்ல. பல ஆண்டுகளாக உடலில் தொடர்ந்து ஏற்படும் மாற்றங்களால் படிப்படியாய் பெண்களின் உடல் இந்த வளர்ச்சி நிலையை எட்டுகிறது.
ஒரு சிறுமியை குமரியாக்கும் அத்தனை அம்சங்களும் அவள் இனப்பெருக்க உறுப்புகளில்தான் இருக்கின்றன. அதிசயமும், ஆச்சரியமும் நிறைந்த இந்த இனப்பெருக்க உறுப்புகளில் உள் உறுப்புகளாக அமைந்திருக்கும் கருப்பை, கருக்குழாய், சினைப்பை, சினை முட்டை போன்றவை குறிப்பிடத்தக்கவை. கருப்பை என்பது தசையால் அமைந்த உறுப்பு.
இதன் மொத்த நீளம் 7.8 செ.மீ! பருமன் 3.4 செ.மீ! இதன் மேல் பக்கம் அகலமாக இருக்கும். கருப்பை கழுத்து எனப்படும் கீழ்ப்பகுதி குறுகியிருக்கும். நடுப்பகுதி மையோமெட்ரியம் எனப்படும். கருப்பையில் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு மேல் பகுதி திறப்புகள் கருப்பை குழாய்களோடு இணைந்திருக்கின்றன.
கீழ்ப் பகுதித் திறப்பு கருப்பைக் கழுத்துடன் இணைந்திருக்கிறது. கருப்பையின் இரண்டு பக்கங்களிலும் பக்கத்திற்கு ஒன்றாக சுமார் பத்து செ.மீ. நீளத்தில் இரண்டு கருக்குழாய்கள் உள்ளன. குழாயின் கடைசிப் பகுதி சினைப்பையை நோக்கி வாய்போலத் திறந்து வளைந்திருக்கும். இந்த வழியாகத்தான் சினை முட்டை கருப்பையை நோக்கி நகரும்.
கருப்பையின் பின்னால், கருக் குழாயின் வெளி நுனிப் பகுதியில் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு சினைப்பைகள் உள்ளன. இவை தலா சுமார் 6 கிராம் எடை கொண்டவை. சிறுமியாக இருக்கும்போது வழவழப்பாகத் தோன்றும் சினைப் பைகள், அவள் பருவத்தை அடையும்போது மேடு, பள்ளம் கொண்டதாக மாறுகிறது.
இந்த பைகளில் பல லட்சம் சினை முட்டைகள் இருக்கும். ஆனால் அதில் ஒரு பெண் அதிகபட்சமாக தன் வாழ்நாள் முழுவதும் 500 சினை முட்டைகளைதான் வெளியேற்றுவார். பெண்ணின் இனப்பெருக்க உறுப்பில் ஏற்படும் வளர்ச்சி மற்றும் மாற்றங்கள், இயக்கங்கள், தூண்டுதல்கள் அனைத்திற்கும் ஹார்மோன்களே மூல காரணங்களாக இருக்கின்றன.
ஹார்மோன்களுக்கே தலை போல் விளங்குவது, பிட்யூட்டரி என்ற சுரப்பி. இதை மூளையில் உள்ள தலாமஸ் என்ற பகுதி கட்டுப்படுத்துகிறது. இது நேரடியாகவும், மற்ற சுரப்பிகளை ஊக்குவித்தும் உடலை இயங்கச் செய்கிறது. பெண் பூப்படையும் காலத்தில் ஹார்மோன்கள் துரிதமாக செயல்பட ஆரம்பிக்கும்.
மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி ஹார்மோனை சுரக்கச்செய்து சினைப்பைகளுக்கு அனுப்பும். சினைமுட்டைகளைத் தூண்டி முதிர்வடையச் செய்யும். இன்னொரு ஹார்மோன் முதிர்ந்த முட்டையை வெளியிடச் செய்யும். பூப்படையும் பருவத்தில் பெண்ணுக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரக்கிறது. இதனால்தான் மார்பகங்கள் வளர்ந்து, பெரிதாகிறது.
இடுப்பிலும், பின்பகுதியிலும் பல்வேறு வளர்ச்சி மாற்றங்களையும் இந்த ஹார்மோன் உருவாக்குகிறது. ஒரு பெண் 16 வயது வரை பூப்பெய்தவில்லை என்றால் அதற்கு ஹார்மோன்களின் செயல்பாட்டுக் குறைவு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். கருப்பை, அண்ணீரகச் சுரப்பி, சினைப்பை, பிறப்பு உறுப்பு பாதை போன்றவைகளில் ஏற்படும் நோய்களாலும் பூப்படைவது தாமதமாகலாம்.
கருப்பை, சினைப்பை போன்றவை பிறவியிலே இல்லாத பெண்கள் பூப்படைய மாட்டார்கள். சில பெண்களுக்கு உடலுக்குள் பூப்படைந்ததற்கான அறிகுறிகள் இருக்கும். ஆனால் மாதவிலக்கு உதிரம் வெளியேற முடியாத நிலை ஏற்படும். இதை கண்டுபிடித்து சிகிச்சை கொடுத்து சரி செய்திடலாம். 16 வயதுக்குப் பிறகும் பூப்படையாத பெண்கள், மகப்பேறு மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.
அவர்களுக்கு அதிகமாக கால்களில் வியர்த்தல், தலை மற்றும் மார்பகத்தில் திசு தளர்ச்சி, நுரையீரல் தொடர்புடைய நோய்கள், உடல் குண்டாக இருத்தல் போன்ற பாதிப்புகள் இருக்கலாம். மேலும் வயிற்றில் அதிக அமிலச் சுரப்பு, இதயத்தில் எப்போதும் படபடப்பு, அதிகமாக மூச்சு வாங்குதல் போன்ற குறைபாடுகளும் இருக்கலாம்.
உடல் பலகீனம், ரத்த சோகை, காலையில் பாதம் வீங்குதல்- மாலையில் கணுக்காலில் வீங்குதல் போன்ற கோளாறு கொண்ட பெண்களும் பூப்படைவது தாமதமாகும். காரணம் கண்டுபிடிக்கப்பட்டு, சரியான சிகிச்சை பெறுவதன் மூலம் பூப்படைதல் சாத்தியமாகும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» 100 உண்மைகள்
» 501 அதிசயமான உண்மைகள்
» அதிசய உண்மைகள்
» உடற்பயிற்சியில் சில உண்மைகள்
» உடற்பயிற்சியில் சில உண்மைகள்
» 501 அதிசயமான உண்மைகள்
» அதிசய உண்மைகள்
» உடற்பயிற்சியில் சில உண்மைகள்
» உடற்பயிற்சியில் சில உண்மைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum