ஈஸியான… கார சட்னி
Page 1 of 1
ஈஸியான… கார சட்னி
வீட்டில் தோசை, இட்லி என்று செய்யும் போது, அவற்றிற்கு சற்று சுவையாகவும், காரமாகவும் ஒரு சட்னி செய்ய வேண்டுமென்றால், அதற்கு இந்த கார சட்னி சரியாக இருக்கும். அதிலும் இந்த கார சட்னியை குழந்தைகள் நன்கு விரும்பி சாப்பிடுவர். ஏனெனில் இதில் சேர்க்கும் அதிகப்படியான காரத்தை, இதில் ஊற்றி நல்லெண்ணெய் குறைத்துவிடும். இப்போது அந்த கார சட்னியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 3
பூண்டு – 2 பல்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின் மிக்ஸியில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி மற்றும் பூண்டு சேர்த்து, நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து மிளகாய் துளையும் அத்துடன் சேர்த்து, ஒரு முறை அடித்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பிறகு அரைத்து வைத்துள்ள வெங்காய கலவையை அத்துடன் சேர்த்து, சிறிது தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிட்டு, இறுதியில் சிறிது நல்லெண்ணெயை ஊற்றி இறக்க வேண்டும்.
இப்போது சுவையான கார சட்னி ரெடி!!! இதனை தோசை, இட்லி போன்றவற்றுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஈஸியான... கார சட்னி
» ஈஸியான முட்டை குழம்பு
» ஈஸியான… முட்டை பணியாரம்!
» ஈஸியான... முட்டை பணியாரம்!
» ஈஸியான கேரட் அல்வா!!!
» ஈஸியான முட்டை குழம்பு
» ஈஸியான… முட்டை பணியாரம்!
» ஈஸியான... முட்டை பணியாரம்!
» ஈஸியான கேரட் அல்வா!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum