எய்ட்ஸினை விட கொடிய நோய் கொணோரியா ஏற்பட்ட ஆண் ,பெண் இருபாலருக்கான அறிகுறிகள்
Page 1 of 1
எய்ட்ஸினை விட கொடிய நோய் கொணோரியா ஏற்பட்ட ஆண் ,பெண் இருபாலருக்கான அறிகுறிகள்
koneriyaமனிதர்களை மிரட்டும் எய்ட்ஸ் நோய்க்கே இன்னும் சரியான அளவில் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நிலையில் மற்றொரு பால்வினை நோய் மக்களை அதிகபட்சமாக அச்சுறுத்தி வருகிறது.
பீதியை கிளப்பும் கொணோரியா
தமிழில் வெட்டை நோய் என்றும் ஆங்கிலத்தில் கொணோரியா(Gonorrhea) என்றும் அழைக்கப்படும் இந்த நோய்தான் இப்போது பீதியை கிளப்ப ஆரம்பித்துள்ளது.
நோய் எதிர்ப்பு மருந்து இல்லை
இந்த வெட்டை நோய் ஆண்டிபயாடிக் மருந்துகளுக்கு கட்டுப்படுவதில்லையாம். இந்தநோய் விரைவில் குணப்படுத்த முடியாத ஒரு நோயாக மாறி வருவதை கவனத்தில் கொள்ள வேண்டும் என இங்கிலாந்தில் நடக்கின்ற ஒரு மைக்ரோ பயாலஜிஸ்டு மாநாட்டில் எச்சரிக்க உள்ளனர் நிபுணர்கள்.
காலம் தாழ்த்தும் நிபுணர்கள்
வெட்டை நோயை எதிர்க்கவல்ல புதிய அண்டிபயாடிக் மருந்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பார்கள் என்ற நம்பிக்கையோடு நோயாளிகளுக்கு மற்ற சிகிச்சைகளைத் தந்து காலம் தாழ்த்துவதைத் தவிர சுகாதாரத்துறை நிர்வாகிக்களுக்கு வேறு வழியில்லாமல் போகலாம் என இந்த மாநாட்டில் எச்சரிக்கப்படவுள்ளது.
ஆண்களுக்கு அறிகுறிகள்
இந்த நோய் தொற்று ஏற்பட்டால் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். ஆண் உறுப்புக்களில் இருந்து மஞ்சள் நிற திரவம் வெளிப்படும். அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்று உணர்வு ஏற்படும்.
பெண்களுக்கு அறிகுறிகள்
பெண்களின் கருப்பைக் கழுத்துப் பிரதேசம் தொற்று ஏற்படும். அதனால்தான் நோய் அறிகுறிகள் வெளியில் தெரிவதில்லை.
அடிவயிற்றில் வலி ஏற்படும், ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படும். பெண் உறுப்பில் இருந்து துர்நாற்றத்துடன் கூடிய மஞ்சள் நிற திரவம் சுரக்கும்.
உறவு கொள்ளலாமா?
இந்த நோய் தாக்குதல் இருக்கும் போது வாய் வழி உறவில் ஈடுபட்டால் தொண்டையில் கரகரப்பு, தொண்டையில் தொற்றுநோயும் ஏற்படும்.
அதேசமயம் மற்ற முறையிலான உறவின் மூலம் நோய் தொற்று அதிகமாக சீல் வடியவும் வாய்ப்புள்ளது என்கின்றனர் நிபுணர்கள்.
மருந்து தேவை இம்மாநாட்டில் பாலுறவு நோய்கள் சம்பந்தப்பட்ட இங்கிலாந்தின் முன்னணி நிபுணரான பேராசிரியை கேத்தி ஐசன் குரலெழுப்பவுள்ளார். அதே சமயம் பாதுகாப்பான உடலுறவுப் பழக்கங்கள், மேம்பட்ட நோய்க் கண்டுபிடிப்பு பரிசோதனைகள் போன்றவை அவசியம் எனவும் அவர் வலியுறுத்துகிறார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஈரல் நோய் - பிரிட்டனின் மிகக் கொடிய கொல்லும் நோய்
» பெண்களுக்கு மாரடைப்பு நோய் அறிகுறிகள் பற்றி தகவல் !!
» பெண்களுக்கு மாரடைப்பு நோய் அறிகுறிகள் பற்றி தகவல் !!
» பலன் தரும் ஸ்லோகம் : (கொடிய நோய்கள் நீங்க, மரண பயம் விலக...)
» பன்சானுக்கு ஏற்பட்ட ஞானோதயம்
» பெண்களுக்கு மாரடைப்பு நோய் அறிகுறிகள் பற்றி தகவல் !!
» பெண்களுக்கு மாரடைப்பு நோய் அறிகுறிகள் பற்றி தகவல் !!
» பலன் தரும் ஸ்லோகம் : (கொடிய நோய்கள் நீங்க, மரண பயம் விலக...)
» பன்சானுக்கு ஏற்பட்ட ஞானோதயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum