தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நீரிழிவு நோயால் பெண்மைக் குறைவு

Go down

நீரிழிவு நோயால் பெண்மைக் குறைவு Empty நீரிழிவு நோயால் பெண்மைக் குறைவு

Post  meenu Thu Jan 24, 2013 12:46 pm

பெண்களை பொறுத்த வரையில் பாலுறுப்புகளுக்கு வரும் பல ரத்த நாளங்கள் பெரிடோனியம் (அடி வயிற்றின் மிருதுவான, தெளிவான ஜவ்வு) பகுதிகளில் இருந்து வரும் இந்த நரம்புகள், மென்மையானவை, சீக்கிரம் சேதமுறக்கூடியவை. பெண்களின் சிறுநீரகம், கீழ் முதுகு, இடுப்பு போன்ற இடங்களிலிருந்து வரும் லிம்ப தெடிக் (பரிவு, தசைகளை இயக்குபவை.

இந்த நாளங்கள், நரம்புகள் எல்லாம் சிறியவை, கிளை நரம்புகள், இந்த நரம்புகள் பெண் உறுப்பில் உள்ளவை இவையே பாலுறவின் போது விரிந்து சுருங்கி உணர்ச்சி வசப்படுகின்றன. சர்க்கரை வியாதியால் இந்த நரம்புகள், நாளங்கள் பாதிக்கப்படும். பூரண உணர்ச்சி இல்லாததால் பெண் உறுப்பு ஈரமாகி விரிவாகுவது நடக்காது.

உடலுறவு அப்போது வலியை உண்டாக்கும் பெண்ணுறுப்பு, வறட்சி, ரத்தம், சுரப்பு, நீர் இல்லாத நிலை, வலியுள்ள உடலுறவு ஏற்படுகின்றன. இதனால் பெண்களுக்கு உடலுறவு பிடிக்காமல் போய் விடுகிறது. ஆண்மைக் குறைவு ஏற்படாமல் தவிர்க்கவும் குறைபாடு இருப்பின் அவை அதிகரிக்காமல் தடுக்கவும் முன்னெச்சரிக்கை அவசியம் தக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக் கொள்வது அவசியம்.

மாற்றத்தை ஏற்படுத்து ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வது அவசியம். கட்டுப்பாடான வாழ்க்கை, போஷாக்கான அதே சமயம் சர்க்கரை அளவை அதிகரிக்காத உணவு முறை, உடற்பயிற்சி, தக்க இடைவெளியில் பரிசோதித்துக் கொள்வது, தகுந்த மருத்துவ ஆலோசனை, ரத்த அழுத்தம் இருப்பின் அதனையும் கட்டுப்பாட்டிற்குள் வைப்பது போன்றவை அத்தியாவசியத் தேவை.

இயற்கை முறையிலும் மூலிகை முறை மருத்துவத்திலும் இவற்றிற்கு இன்றியமையாத எண்ணற்ற வழி முறைகளும் மூலிகைகளும் உள்ளன. அவற்றை காலம் தாழ்த்தாமல் தக்க சமயத்தில் கலந்து ஆலோசித்து உபயோகிக்க நீரிழிவுடன் வாழப் பழகிக்கொள்ளலாம். சர்க்கரை வியாதி இல்லாதவர்களை விட சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படும் வாய்ப்பு 2 மடங்கு அதிகம் என்கிறார் டாக்டர் காமராஜ்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum