மட்டர் பனிர்
Page 1 of 1
மட்டர் பனிர்
ஓட்டல்களில் `மட்டர் பனிர்’ வாங்கி சாப்பிடுவதைக் காட்டிலும், வீட்டிலேயே இந்த ஸ்டார் டிஷ் வகையை செய்து அசத்தலாம்.
தேவையானவை:
பச்சைப்பட்டாணி – 1/2 கிலோ
பெரிய வெங்காயம் – 2
கனிந்த தக்காளி – 4
தயிர் – 1 கப்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
தனியா தூள் – 1 டீஸ்பூன்
சீரகம் – 1/4 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
பச்சைக்கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
பெரிய வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும். தக்காளி பழத்தை வேக வைத்து தோல் உரித்து மசித்துக் கொள்ளவும். கடையில் விற்கும் பனீரை சிறு துண்டுகளாக கட் செய்து எண்ணெயில் லேசாக வறுத்து 2 கப் தண்ணீரில் ஊற வைக்கவும். பச்சைப் பட்டாணியை தோல் உறித்து வேக வைத்துக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து தேவையானஅளவு நெய் விட்டு சீரகத்தைப் போட்டு பொரிந்ததும் அரைத்த வெங்காயக் கலவையை சேர்க்கவும். அதை பச்சை வாசனை போகும் அளவுக்கு வதக்கவும். அத்துடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம்மசாலாத்தூள், உப்பு சேர்த்து அதையும் நன்கு வதக்கவும். வதங்கியதும் மசித்த தக்காளி பழத்தை சேர்த்து சிறிது நேரம் வதக்கி அத்துடன் ஒரு கப் தயிர் சேர்த்து கிளறவும்.
கடைசியாக வேகவைத்த பட்டாணி, பனீர் (நீரில் ஊறிய பனீரை பிழிந்து எடுக்கவும்) சேர்த்து மூடி வைத்து அடுப்பை சிறு தீயில் வைத்து கிரேவி பதம் வந்ததும் இறக்கி வைத்து பச்சைக்கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும். சப்பாத்தி, பூரி, நான், பிரியாணி வகைகளுக்கு தொட்டு சாப்பிட ஏற்றது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum