கிரேக்க நாட்டு சூப்பர் உணவுகள்-ஸ்டப்டு பெப்பர்ஸ்
Page 1 of 1

பெரிய குடை மிளகாய் இரண்டு வாங்கிக்கொள்ளவும். காம்போடு சேர்த்து தொப்பி மாதிரி வெட்டி, விதையை நீக்கவும்.
நிரப்புவதற்கு தேவைப்படும் பொருட்கள்:
பாசுமதி அரிசி- 150 கிராம், பெ.வெங்காயம்- 100 கிராம், ஆலிவ் ஆயில்- 100 மி.லி., பூண்டு- 30 கிராம், தக்காளி சாஸ்- 500 கிராம், பைன் விதை- 10 கிராம், புதினா- 30 கிராம், பார்ஸ்லி (கிரேக்க நாட்டு கொத்து மல்லி இலை)- 50 கிராம்., உப்பு மற்றும் மிளகு தூள்- தேவைக்கு.
செய்முறை:
வெங்காயம், பூண்டுவை பொடியாக நறுக்கி ஆலிவ் ஆயிலில் வதக்கவும். பொன்னிறம் ஆகும்போது ஊறவைத்த அரிசியை வடிகட்டி எடுத்து, சேர்த்து கிளறவும். தக்காளி சாஸ் இரண்டு கரண்டி அதில் கொட்டி, ஒரு கொதி வரும் அளவிற்கு வேகவைக்கவும். உப்பு, மிளகுதூள், பார்ஸ்லி, புதினா போன்றவைகளை நறுக்கி அதில் சேர்க்கவும். பைன் விதைகளை நறுக்கியோ, அப்படியோ சேர்த்து வேகவிடவும். அரிசி 25 சதவீதம் வெந்தால் போதும்.
வெட்டி வைத்திருக்கும் குடை மிளகாயின் உள்ளே மேற்கண்ட அரிசி கலவையை வைக்கவேண்டும். தொப்பிபோல் வெட்டி வைத்திருக்கும் காம்பு பகுதியை வைத்து மூடிவிடவேண்டும். மீதமிருக்கும் தக்காளி சாஸை சூடு செய்து அதில் குடைமிளகாய் இரண்டையும் வைக்கவும். ஓவனில் 200 டிகிரியில் 40 நிமிடங்கள் வைத்திருங்கள். இதன் மூலம் சாதம் வெந்துவருவதோடு, குடை மிளகாய்க்கும் நல்ல கலர் கிடைக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கிரேக்க நாட்டு சூப்பர் உணவுகள் -முசாகா
» மழைக்காலத்தில் உணவு ஸ்டப்டு பிரட் பஜ்ஜி

» கிரேக்க இலக்கியம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum