பாலக் சிக்கன் மசாலா
Page 1 of 1
பாலக் சிக்கன் மசாலா
சிக்கன் உணவு என்றாலே ஒரு கட்டு கட்டும் நம்மவர்கள், பாலக்கீரையுடன் இணைந்த சிக்கன் மசாலாவை மட்டும் விட்டு வைப்பார்களா? செய்து பார்த்து சாப்பிட்டு அதன் சுவைக்கு பெருமை சேருங்கள்.
தேவையான பொருட்கள்
பாலக்கீரை -1 கட்டு
சிக்கன் -1/2 கிலோ
வெங்காயம் -300 கிராம் (நறுக்கியது)
தக்காளி -200 கிராம் (நறுக்கியது)
மிளகாய்த்தூள் -2 டீஸ்பூன்
தனியாத்தூள் – 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன்
பட்டை, லவங்கம்,
ஏலக்காய் – தலா 2
இஞ்சி, பூண்டு
விழுது – 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் -தேவைக்கேற்ப
செய்முறை:
வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, ஏலக்காய், லவங்கம் சேர்த்து தாளிக்கவும். வெங்காயம், தக்காளி, இஞ்சி, மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பூண்டு விழுது ஆகியவற்றை வதக்கவும். மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூளுடள் சிறிது தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
சுத்தம் செய்து நறுக்கிய பாலக்கீரையை சேர்த்து வதக்கவும். இத்துடன் சுத்தம் செய்து நறுக்கிய சிக்கனையும் சேர்த்து வதக்கவும். தேவையான உப்பு சேர்க்கவும். தேவையானால் சிறிது தேங்காய்ப்பால் சேர்த்துக் கொள்ளலாம்.
சிக்கன், கீரை மசாலாவுடன் சேர்ந்து வெந்து தொக்கு பதத்தில் வந்ததும் இறக்கி, கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும். இது டிபன் மற்றும் சாத வகைகளுக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பாலக் மசாலா இட்லி
» குட்டீஸ்களுக்கு பிடித்த சிக்கன் லெக் பீஸ் மசாலா வறுவல்!
» காரமான சிக்கன் மசாலா
» பஞ்சாபி சிக்கன் மசாலா
» பட்டர் சிக்கன் மசாலா
» குட்டீஸ்களுக்கு பிடித்த சிக்கன் லெக் பீஸ் மசாலா வறுவல்!
» காரமான சிக்கன் மசாலா
» பஞ்சாபி சிக்கன் மசாலா
» பட்டர் சிக்கன் மசாலா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum