ஆபத்தாகும் `சைஸ் ஜீரோ' உடல்வாகு!
Page 1 of 1
ஆபத்தாகும் `சைஸ் ஜீரோ' உடல்வாகு!
எல்லாப் பெண்களுக்குமே எப்போதும் ஸ்லிம் ஆக இருக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். ஆனால், சிலநேரங்களில் எக்குதப்பாக எடை கூடிவிடுவார்கள். இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் எவ்வளவுதான் சாப்பிட்டாலும் உடல் எடை கூடவே கூடாது. அவர்களது உடல் எடை மிகவும் குறைவாக இருக்கும்.
இப்படி உடல் எடை குறைவாக இருக்கும் பெண்களுக்கு கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று அதிர வைக்கிறார்கள் மருத்துவர்கள். இன்றைய பெண்கள், `சைஸ் ஜீரோ' என்கிற குறைவான எடை அளவில் தங்களது உடலை வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். அப்போதுதான், தாங்கள் `ஸ்லிம்' ஆக இருக்க முடியும் என்று நினைக்கிறார்கள்.
இதற்காக கடுமையான டயட்டில் இருக்கிறார்கள். நான் `டயட்'டில் இருக்கிறேன்... என்று சொல்வதைக்கூட இன்றைய பெண்கள் பேஷனாக கருதுகிறார்கள். பெரும்பாலும், இன்றைய தலைமுறை இளம்பெண்கள் பேஷன் ஷோக்களில் `கேட் வாக்' வரும் மாடல் அழகிகளைப் பார்த்துதான் `சைஸ் ஜீரோ' உடல் எடையைப் பெற முயற்சி செய்கிறார்கள்.
இப்படி ஸ்லிம் உடல்வாகுக்கு ஆசைப்பட்டு கண்டபடி `டயட்'டில் இருக்கப்போய் சில பெண்கள் எலும்பும் தோலுமாக மாறிப்போய் விடுகிறார்கள். இந்த திடீர் உடல் எடை குறைப்பு அவர்களை உடல் ரீதியான பல தொந்தரவுகளுக்கு ஆளாக்குவதுடன் அவர்களது அழகையும் பாழாக்கிவிடுகிறது.
இது ஒருபுறம் என்றால், திருமணத்திற்குப் பிறகு இப்படி எலும்பும் தோலுமாக காட்சி தரும் மெலிந்த பெண்கள் கருத்தரிப்பதிலும் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது. காரணம், மெலிந்த உடல் வாகுடன் கூடிய பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சரியாக சுரப்பதில்லை என்பதுதான். இதனால் அவர்கள் கருத்தரிப்பதும் சிரமமாகிவிடுகிறது.
அமெரிக்காவின் சிகாகோவைச் சேர்ந்த பிரபல மகப்பேறு மருத்துவர் ரிச்சர்ட் ஷெர்பான் இதுபற்றி கூறும்போது, "நான் இதுவரையில் சுமார் 2,500 பேருக்கு செயற்கை முறையில் கருத்தரிப்பு சிகிச்சையை செய்துள்ளேன். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஒல்லியான உடல்வாகு கொண்டவர்கள். என்னுடைய அனுபவத்தில் `சைஸ் ஜீரோ' உடல்வாகு பெண்கள்தான் கருத்தரிப்பதில் நிறைய சிரமங்களை எதிர்கொள்கிறார்கள்.
அதேசமயம், குண்டாக இருப்பவர்கள், அதிலும் அளவுக்கு அதிகமான உடல் எடையில் இருப்பவர்களுக்கு கூட பெரும்பாலும் இந்தப் பிரச்சினை வருவதில்லை'' என்றார் அவர். நீங்களும் சைஸ் ஜீரோ உடல்வாகை பெற முயற்சிக்கும் பெண் என்றால், இப்போதே உஷாராகிவிடுங்கள்...!

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சிக்ஸ் பேக்கும் சைஸ் ஜீரோவும்
» ஆபத்தாகும் மாத்திரைகள்
» ஆபத்தாகும் மாத்திரைகள்
» கர்ப்பிணிகளுக்கு ஆபத்தாகும் எக்ளாம்ப்சியா நோய்!
» ஆபத்தாகும் அழகுப் பொருட்கள்: நிபுணர்கள் எச்சரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum