ட்ரிங்... ட்ரிங் சத்தம் அடிக்கடி கேட்குதா? அப்ப உங்களுக்கு ரிங்கிஸ்டி வியாதி இருக்கு
Page 1 of 1

ஏதாவது ரொம்ப முக்கியமான போன் காலுக்காக வெயிட் பண்ணிட்டு இருப்போம். அந்த போன் கால் உங்க வாழ்க்கையையே மாத்துற மாதிரியான போன் காலாக இருக்கும். அதனால எப்படா போன் வரும்ன்னு படபடப்பா காத்திட்டு இருப்போம். ஒரு பத்து தடவ போனை எடுத்து எடுத்து பார்ப்போம். அந்த மாதிரி சமயத்தில உங்க செல்போன் ரிங் ஆகிற மாதிரி அடிக்கடி தோணும். ஆனா எடுத்து பார்த்தா எந்த காலும் வந்திருக்காது.
அதே மாதிரி, வண்டியில போயிட்டு இருக்கிறப்ப, செல்போன் வைபிரேட் ஆகிற மாதிரி தோணும். வண்டிய ஓரம் கட்டிட்டு, செல்போனை எடுத்து பார்த்தா எதுவுமே இருக்காது. இப்படிப்பட்ட அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கா...? அப்படின்னா உங்களுக்கு ரிங்கிஸ்டி வியாதி வந்திருச்சுன்னு அர்த்தம். இப்ப எல்லாம் செல்போன் ஒரு தவிர்க்க முடியாத விஷயமாகி விட்டது.
நம்ம கையில ஐந்து விரல்கள்ல எக்ஸ்ட்ரா ஒரு விரல் மாதிரி செல்போன் ஆயிடுச்சு. தூங்குற நேரத்தில கூட செல்போனை நோட்டிகிட்டே இருக்கோம். இமெயில், பேஸ்புக், யூ டியூப், இன்டர்நெட்ன்னு எல்லாமே செல்போன்ல பார்க்கிற வசதி வந்திட்டதால செல்போன் இருந்தா போதும் என்கிற லெவல்ல மாறிடுச்சு.
எப்ப பார்த்தாலும் போனும் கையுமா அலையுறதாலதான் இந்த ரிங்ஸ்கிஸ்டி வியாதி வருதுன்னு மருத்துவ நிபுணர்கள் சொல்றாங்க. இந்த வியாதியோடதான் உலகத்தில இருக்குற முக்காவாசி பேரே வாழ்றாங்க. இதனால பெரிய பாதிப்பு இல்லைன்னு சொல்றாங்க. ‘ரிங்ஸ்கிஸ்டி என்பது மூளை நமக்கு போடுற ஒரு தவறான உத்தரவு.
தனியாக இருப்பவர்கள், அதிகமாக யோசிப்பவர்களுக்கு இந்த மாதிரி போன் கால் வருவது போன்ற உணர்வு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. ஏதாவது விபத்தில் கை, கால்களை இழந்தவர்கள், அதன் பிறகும் கை, கால் இருப்பது போன்ற உணர்வார்கள். அதைப் போலத்தான் இதுவும். சிறுவர்கள், முதியவர்கள், இளைஞர்கள் என்று வயது வித்தியாசமின்றி ரிங்கிஸ்டி வேகமாக பரவி வருகிறது’ என்கிறார்கள் மருத்துவர்கள்.
சரி... இந்த ரிங்கிஸ்டியில் இருந்து தப்புவது எப்படி...?
* ஒருநாளைக்கு சில மணி நேரங்களிலாவது செல்போன் உபயோகிக்காமல் இருங்கள்.
* படுக்கைக்கு தூங்க சென்ற பிறகு எக்காரணத்தை கொண்டும் செல்போனை உபயோகிக்காதீங்க.
* முடிந்தவரை இரவு நேரத்தில் செல்போனை அணைந்து விடுங்கள்.
* மூளைக்கு ஓய்வு கொடுங்க. அதிகமா யோசிக்காதீங்க. செல்போனை தலையணைக்கு பக்கத்தில வைச்சுக்காதீங்க.
* எப்பவுமே எதையாவது யோசிகிட்டே இருக்காதீங்க. ரிலாக்சா இருங்க.
கால் சென்டர், டெலி காலிங், மார்க்கெட்டிங்... இப்படி அதிகமா போனை யூஸ் பண்ற துறையில் வேலை பார்க்கிறவங்களுக்கு ரிங்ஸ்கிஸ்டி பிரச்னை கட்டாயமா இருக்கும். அப்படிப்பட்ட துறையில இருக்கிறவங்க, ஓய்வு நேரத்தில ரிலாக்சா மெலோடி பாட்டு கேளுங்க (அதையும் செல்போன்ல கேட்காதீங்க). இயற்கை சூழல்ல ஓய்வு எடுங்க. அப்பதான் உங்க மூளை சுறுசுறுப்பா இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» உங்களுக்கு தொப்பையிருக்கா? அப்ப இதை படிங்க!

» அடிக்கடி தலைசுற்றலா! இதோ உங்களுக்கு டிப்ஸ்

» சர்க்கரை வியாதி குறைய

Permissions in this forum:
You cannot reply to topics in this forum