தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

த்ரிஷா முகம் மறந்து போகும்!

Go down

 த்ரிஷா முகம் மறந்து போகும்! Empty த்ரிஷா முகம் மறந்து போகும்!

Post  ishwarya Thu May 09, 2013 11:52 am

மாற்றம் செய்த நேரம்:10/15/2012 2:37:24 PM
14:37:24
Monday
2012-10-15
Singam II first look
MORE VIDEOS

தமிழ் சினிமாக்களில் ஹீரோவுக்கோ, ஹீரோயினுக்கோ வாயில் நுழையாத பெயர்களில் திடீரென ஒரு நோய் வரும். ‘இப்படியெல்லாம் கூட ஒரு
நோயா? ரீல் சுத்தறாங்கப்பா’ என்கிற ரீதியில் தியேட்டரில் கமெண்ட் பறக்கும். வாயில் நுழையாத பெயர்களில் உள்ள நோய்கள் மேலோட்டமாகப்

பார்த்தால் நகைச்சுவையாகத் தெரிந்தாலும், அப்படிப்பட்ட பல நோய்கள் உண்மையிலேயே உண்டு என்பதும், வாயில் நுழையாத, நாமெல்லாம்
கேள்வியே பட்டிருக்காத எத்தனையோ நோய்கள் மனிதனைப் பதம் பார்த்துக் கொண்டிருக்கின்றன என்பதும் பதற வைக்கிற நிஜம். அப்படியொரு
நோய்தான் ‘புராஸோபாக்னோசியா’ (Prosopagnosia)!

புராஸோபாக்னோசியாவை ‘Face Blindness’ என்றும் சொல்கிறார்கள். தமிழில் சொல்ல வேண்டுமென்றால் ‘முகக்குருடு’. அதென்ன

முகக்குருடு? பெயரைப் போலவே நோயும் விசித்திரமானதுதான். அரிதாக சந்திக்கிற உறவினர்களையும் நண்பர்களையும் மறந்து போவது வயதான காலத்தில் இயற்கையாக நடக்கிற விஷயம். முகக்குருடு பிரச்னை அப்படிப்பட்டதில்லை. நேற்றுவரை சூப்பர் ஸ்டார் ரசிகராக இருந்தவருக்கு, முகக்குருடு பாதித்ததும், ரஜினி முகம் மறந்து போகலாம்.

சச்சினையும் சானியா மிர்ஸாவையும் அடையாளம் தெரியாமல் போகலாம். த்ரிஷாவையும் தமன்னாவையும் யார் எனக் கேட்கலாம். கட்டிக்கொண்ட கணவர் அல்லது மனைவியின் முகமே மறந்து போகலாம். கண்ணாடி முன் நிற்கையில், அதில் தெரிகிற தன்னுடைய பிம்பம் யாருடையது என்கிற அளவுக்குக் குழப்பம் உண்டாகலாம். சில வருடங்களுக்கு முன் மறைந்த பிரபல காமெடி நடிகருக்கு இந்தப் பிரச்னை இருந்ததாகச் சொல்கிறார்கள் தமிழ் சினிமா வட்டாரத்தில்.

முகங்களை அடையாளம் தெரிந்துகொள்வதில் அவருக்கு இருந்த சிக்கல்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் பல முறை வெளிப்பட்டதைப் பார்த்திருக்கிறார்கள் சக நட்சத்திரங்களும், டெக்னீஷியன்களும். பல படங்களில் தன்னுடன் சேர்ந்து நடித்த ஒரு பிரபல முகத்தை அவருக்கு அடையாளம் தெரியாமல், ‘யார் அவன்?’ எனக் கேட்டிருக்கிறார். அந்தப் பிரபல முகம் நடிகர் கமல்! வனவிலங்குகளின் பாதுகாப்புக்காகப் போராடுபவரும், சிம்பன்ஸி குரங்குகளைப் பற்றிய ஆராய்ச்சியாளருமான ஜேன் கூடால், பிரபல மேஜிக் நிபுணர் பென் ஜில்லெட், நரம்பியல் நிபுணரும் எழுத்தாளருமான ஆலிவர் சாக்ஸ், பிரெஞ்சு நடிகர் தியரி, அமெரிக்க ஓவியர் சக் க்ளோஸ்...

முகக்குருடு பிரச்னையால் பாதிக்கப்பட்ட பிரபலங்களின் பட்டியல் இப்படியாக நீள்கிறது... இவ்வளவு ஏன்? முன்னாள் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் கூட இந்த பிரச்னையினால் அவஸ்தைப்பட்டதாகத் தகவல் உண்டு. ‘‘இது ஒருவித மூளை நோயின் அறிகுறி’’ என்கிறார் மனநல மருத்துவர் ஆனந்தன்... ‘‘நாம் ஒரு முகத்தை அல்லது ஒரு பொருளைப் பார்த்த உடன் எப்படித் தெரிந்து கொள்கிறோம்? ஐம்புலன்களின் உணர்ச்சித் தூண்டல்கள் மூளையில் ஏற்படுத்தும் விளைவுகளின் மூலமாகத்தான்! ஐம்புலன்களில் பார்த்தல், கேட்டல் என்ற இரண்டு செயல்பாடுகளை எடுத்துக்கொள்வோம்.
ஒரு பேனாவை பார்த்த உடனேயே ‘பேனா’ என்று சொல்லி விடுகிறோம்.

ஆனால் இதில் நடைபெறும் சிக்கலான மனித மூளையின் செயல்பாட்டைப் பார்த்தோ மேயானால்... பேனா என்ற புறத்தூண்டல் பொருளானது, கண்களின் வழியாக ஊடுருவி, இரண்டு கண் பந்துகளின் பின்புறம் ஒரு புள்ளியில் விழித்திரையில் குவிகிறது. அங்கிருந்து பேனாவின் வடிவம் பார்வைக்கான நரம்பின் வழியாக மூளைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. மூளையில் பார்வைக்கு என ஒரு மையம் இருக்கிறது. இந்தப் பார்வை மையத்தில்தான் பேனாவின் வடிவம் பதிவாகி ஞாபகம் செய்து கொள்ளப் படுகிறது. இந்த பிராசஸில் எந்தவொரு இடத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும்,

கோளாறுதான். பேனா என்ற புறத்தூண்டலில் இருந்து பார்வை மையம் எனும் மூளையின் உட்புறச் செயல்பாட்டு மையம் வரை இடையே பல செயல்பாடுகள் நடக்கின்றன. கண்களின் லென்ஸ் பாதிக்கப்பட்டு, வெண்ணிறமாகி (கண்புரை) இருக்கும் போதுதான் அந்த லென்ஸை அகற்றி விட்டு, செயற்கை லென்ஸை பொறுத்தும் கேட்டராக்ட் ஆபரேஷன் செய்கிறார்கள். இந்த லென்ஸ், கண்பந்துகளின் முன்பகுதியில் இருக்கும். விழித்திரை பின்பகுதியில் இருக்கும்.

விழித்திரையில் இருந்துதான் பார்வை நரம்புகள் கிளம்பி, மூளையின் பல்வேறு பகுதிகளைக் கடந்து மூளையின் பின்பக்கம் இருக்கக் கூடிய பார்வை மையத்தை அடைகின்றன. சினிமாக்களில் வில்லன், ஹீரோவின் பின் மண்டையில் கட்டையால் ஓங்கி அடிக்கும் போது பிடரியில் இரண்டு கைகளையும் வைத்துக்கொண்டு கண்கள் சிவந்து, கலங்கி, எதிரே இருக்கும் உருவங்கள் இரண்டாக, நான்காக என மறைந்து, தடுமாறி, கீழே விழுவதைப் பார்த்திருப்போமே..?

‘முகக்குருடு’ பற்றிப் பேசும் போது இவற்றையெல்லாம் விளக்க வேண்டிய அவசியம் என்ன என நீங்கள் கேட்கலாம். முகக்குருடு இருப்பவர்களுக்கு இரண்டு கண்களின் பார்வையிலும் எந்தக் குறைபாடும் இருக்காது. பிரச்னை கண்களைத் தாண்டி, பார்வை நரம்பையும் தாண்டி, பார்வை மையத்தில்தான். இந்தப் பார்வை மையத்திலும் முகங்களை அடையாளம் தெரிந்து கொள்வதற்கென பிரத்யேக மையம் ஒன்று இருக்கிறது. அதற்கு முக மையம்’ என்று பெயர். புராஸோபாக்னோசியா நோயாளிகளுக்கு கோளாறு இந்த முக மையத்தில் மட்டும்தான்.

இது ஒரு நுண்ணிய மூளை நரம்பியல் பிரச்னையாக இருந்த போதிலும், பெரும்பாலானவர்களுக்கு இது மட்டும் தனியாக வருவதில்லை. ஏதேனும் ஒரு பெரிய மூளை நரம்பியல் நோயின் பல அறிகுறிகளில் ஒன்றாகத்தான் வெளிப்படும். நம் மூளை நரம்பியல் நிபுணர்கள் அன்றாடம் பார்க்கும் நோய்களில் சிலருக்கு இந்த முகக்குருடு பிரச்னை இருந்த போதிலும், அதைவிடவும், பல மடங்கு பிரச்னையைக் கொடுக்கும் வேறு ஒரு மூளை நோயுடன் சேர்ந்து இருப்பதால் அதன் முக்கியத்துவம் நோயாளிக்கோ, டாக்டருக்கோ, உறவினர்களுக்கோ தெரியாமல் போய் விடுகிறது.

மேலைநாடுகளில் முகக்குருடு பிரச்னை இருப்பவர்களே தங்களது பிரச்னையுடன் எப்படி வாழ்கிறார்கள் என்பதற்கான உதாரணங்கள் நிறைய

இருக்கின்றன. சில நாவல்களிலும் சினிமாக்களிலும் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.இந்த முகக்குருடு விஷயத்தில் இன்னும் ஒரு சுவாரஸ்யம் என்ன என்றால் மனைவியின் முகத்தைப் பார்த்தவுடன் தெரிந்து கொள்ள முடியாத பிரச்னை ஒருவருக்கு கடந்த 2 ஆண்டுகளாக இருக்கிறதென வைத்துக் கொள்வோம். அவர் தன் மனைவியைப் பற்றிய தகவல்களைக் கேட்டவுடன் இந்த முகத்துக்கு சொந்தக்காரர் தன் மனைவிதான் எனத் தெரிந்து கொள்வார்.

மனைவியின் உடலில் இருந்து வரும் பிரத்யேக நறுமணமும், மனைவியைத் தொடும் போது ஏற்படும் அனுபவமும், அவருக்கு அந்த முகத்தின் சொந்தக்காரர் மனைவி என்பதை உணர்த்தி விடும். காந்தியின் முகத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ள முடியாதவர், வேட்டியையும், கைத்தடியையும், வளைந்த அவரது உடலையும் வைத்துக் கண்டுபிடித்து விடுவார். நேருவை அவரது கோட்டில் உள்ள ரோஜாவை வைத்தும், கலைஞரை மஞ்சள் நிறத் துண்டை வைத்தும் கண்டுபிடித்து விடுவார்’’ என்கிறார் டாக்டர் ஆனந்தன்.முகக்குருடு பாதிப்பு யாருக்கெல்லாம் வரலாம் என்கிற தகவல்களுடன் பேசுகிறார் நரம்பியல் மருத்துவ நிபுணர் ராமகிருஷ்ணன்.

‘‘முகங்களை அடையாளம் தெரிந்துகொள்கிற சக்தி, நம் மூளையின் இரண்டு பக்கங்களிலும் இருக்கிறது. குறிப்பாக வலப்பக்கத்துக்கு அந்த சக்தி

கொஞ்சம் அதிகம். கார் என்ன மாடல் எனச் சொல்வதிலிருந்து, நம் உறவினர்கள், நண்பர்களின் முகங்களை ஞாபகம் வைத்துக் கொண்டு, அடையாளம்

சொல்வது வரை எல்லாம் நடப்பது யீusவீயீஷீக்ஷீனீ எனச் சொல்லக்கூடிய மூளையின் ஒரு முக்கிய மான பகுதியில். இது மூளையின்
பக்கவாட்டில் உள்ள டெம்பரல் லோப் எனச் சொல்லக் கூடிய ஞாபக சக்திக்கான இடத்தில் இருக்கிறது.

இதில் பிரச்னை வந்தாலோ, மூளையின் வலது பக்கத்துக்குப் போகிற ரத்த ஓட்டம் பாதிக்கப் பட்டாலோ, ஆக்சிபிட்டல் லோப் எனச் சொல்லப்படுகிற பார்வை நரம்புகளுடன் சம்பந்தப்பட்ட மூளையின் பின் பகுதி பாதிக்கப்பட்டாலோகூட புராஸோபாக்னோசியா பிரச்னை வரலாம். பக்கவாதத்தின் ஒரு விளைவாகவும் சிலருக்கு இது பாதிக்கலாம். வயதானவர்களை பாதிக்கிற டிமென்ஷியா, அல்சீமர் நோய்களின் விளைவாகவும் இந்த முகக்குருடு பிரச்னை வரலாம். முகத்தை அடையாளம் தெரிந்து கொள்ள முடியாதவர்கள் கூட சம்பந்தப் பட்டவர்களின் குரல்களை வைத்துத் தெரிந்து
கொள்வார்கள்.

நோய் ரொம்பவும் தீவிரமானால், தன்னுடைய முகமே தனக்கு அடையாளம் தெரியாத நிலையும் வரலாம். மருந்து, மாத்திரைகளால் சரி செய்யக்

கூடியதில்லை இது. எண்ணம் மற்றும் செயல் மாற்று சிகிச்சை (காக்னிட்டிவ் பிஹேவியர் தெரபி) மூலம் குணப்படுத்த முயற்சிக்கலாம்.’’
இதுபோன்ற நோய்களை எல்லாம் பார்க்கும்போது தோன்றுவது ஒன்றுதான்... பாவம் இந்த மானுடப் பிறப்பு!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum