தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நீரிழிவுக்கான உணவும், மருந்தும்:

Go down

நீரிழிவுக்கான உணவும், மருந்தும்: Empty நீரிழிவுக்கான உணவும், மருந்தும்:

Post  ishwarya Wed May 08, 2013 6:03 pm

சர்க்கரை நோயை கண்டு கொள்ளாமல் விட்டால் ரத்தக் குழாய்கள் தடிமனாகி, ரத்த ஓட்டம் குறையும். மாரடைப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. சர்க்கரையை கட்டுக்குள் வைக்காமல் விட்டால், அடுத்தடுத்து உடல் உறுப்புகள் பாதிக்க வாய்ப்புள்ளது.

* சர்க்கரை நோய் உள்ளவர்கள் மாவுச்சத்து அதிகம் உள்ள உணவு வகைகளான மைதா, அரிசி, ரவை, கிழங்கு வகைகளைத் தவிர்க்கவும்.

* உப்பு அதிகம் சேர்க்கும் உணவு பதார்த்தங்களையும் தவிர்க்கவும். திரவ ஆகாரங்களை குறைத்து கெட்டியாக சாப்பிடவும். கொழுப்பு உணவுகளான பால், தயிர், நெய் ஆகியவற்றையும் தவிர்க்கவும். அதிகமாக நார்ச்சத்து உள்ள உணவுகள், புரதம் நிறைந்தவற்றை சாப்பிடலாம்.

* அசைவத்தில் முட்டையின் வெள்ளைக் கரு மட்டும் சாப்பிடலாம். கறியில் எலும்பு பகுதியை சாப்பிடலாம். ஈரல், கொழுப்பு போன்றவற்றை சாப்பிடக் கூடாது. ஒரு நாள் சமையலில் மூன்று டீஸ்பூன் அளவு எண்ணெய் சேர்க்கலாம்.

* அசோகமரப் பூக்களை உலர்த்தி பொடி செய்து சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

* அருகம்புல் ஒரு கைப்பிடி அளவு எடுத்து இடித்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் குடித்தால் நீரிழிவு குணமாகும்.

* அல்லிப்பூ, சரக்கொன்றைப் பூ, ஆவாரம் பூ மூன்றையும் சம அளவில் எடுத்து கஷாயம் வைத்துக் குடிக்கலாம்.

* ஆரைக் கீரை சாற்றில் வெந்தயத்தை ஊற வைத்து பொடியாக்கி காலை, மாலை இரண்டு வேளையும் 5 கிராம் அளவுக்கு சாப்பிடலாம்.

* ஆலமரத்தின் வேர்ப்பட்டையை கஷாயம் வைத்து குடித்தால் நோய் கட்டுப்படும்.

* மருதம்பட்டை, அருகம்புல், நாவல் கொட்டை, நெல்லி, கடுக்காய், தான்றிக்காய் அனைத்தையும் சம அளவில் எடுத்து பொடி செய்து சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

* மா மரத்தின் துளிர் இலைகளைப் பறித்து காய வைத்து பொடி செய்து 48 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டால் கட்டுப்படும்.

அளவான உணவு ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிவகுக்கும்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum