பூப்படைந்த பெண்களின் உணவு முறைகள்
Page 1 of 1
பூப்படைந்த பெண்களின் உணவு முறைகள்
* ஒரு பெண் பூப்படையும் போது உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பல மாற்றங்களை சந்திக்கிறாள். உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களை சமாளிக்க அவளுக்கு ஆரோக்கியமான திடமான உணவுகளை கொடுக்க வேண்டும் என்கிறார் உணவு ஆலோசகர்.
* பொதுவாகவே இந்த நேரங்களில் பெண்கள் தங்கள் உடல்களில் பல மாற்றங்களை சந்திக்கிறார்கள். மார்பகங்கள் வளர்ச்சியடையும், இடுப்பு எலும்பு விரிவடையும், கர்ப்பப்பை உறுதியாகும். இந்த நேரத்தில் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது அவசியம்.
* உளுத்தம் பருப்பில் செய்யப்படும் களியில் நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிடலாம் அல்லது அதில் உருண்டைகள் செய்து தரலாம். உளுந்து, இடுப்பு எலும்பை பலப்படுத்தும். உலர்ந்த பருப்புகளான பாதாம், பிஸ்தா, அத்திப்பழம், அக்ரூட், பேரீச்சை பழம் சாப்பிடுவது நல்லது.
* காரணம், ரத்தப் போக்கு அதிகமாக இருக்கும் என்பதால் அதை ஈடுகட்ட பேரீச்சை, மாதுளை மிகவும் நல்லது. அத்திப்பழம் கர்ப்பப்பையை வலுப்படுத்தும். அசைவ உணவுகளில் மீன், முட்டை, சிக்கன் போன்றவற்றை சாப்பிடலாம்.
* இந்த உணவுகளை பெண் வயதுக்கு வந்த பிறகு மாதாமாதம் அந்த நேரத்தில் கொடுப்பது அவசியம். இதனால் உடல் சோர்வு ஏற்படாமலும், இழக்கும் சக்தியை ஈடுக்கட்ட உதவியாக இருக்கும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கர்ப்பக்கால உணவு முறைகள்
» கருச்சிதைவை தவிர்க்கும் உணவு முறைகள்.....
» இளமையை பாதுகாக்கும் உணவு முறைகள்
» இளமையை பாதுகாக்கும் உணவு முறைகள்
» கர்ப்ப காலத்தில் உணவு முறைகள்
» கருச்சிதைவை தவிர்க்கும் உணவு முறைகள்.....
» இளமையை பாதுகாக்கும் உணவு முறைகள்
» இளமையை பாதுகாக்கும் உணவு முறைகள்
» கர்ப்ப காலத்தில் உணவு முறைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum