இயற்கை மருத்துவம் கேப்பேஜ் அடா
Page 1 of 1
இயற்கை மருத்துவம் கேப்பேஜ் அடா
ஆங்கில மருத்துவம் பட்டியலிடுவதைப் போல, இந்திய மருத்துவமுறைகளில் நோய்களின் பட்டியல் இல்லை. வாதம், பித்தம், கபம்.. இதற்குள் எல்லா நோய்களும் அடங்கிப் போகின்றன. மேலோட்டமாக இல்லாமல், நோயின் ஆதியைப் புரட்டி உலுக்கி எடுத்து விரட்டி விடுகிற வித்தைதான் இந்திய மருத்துவம்.
இந்திய மருத்துவத்தில், இயற்கை மருத்துவம் சற்று வித்தியாசமானது. அது நோய்களின் காரணியாக அறுசுவைகளை முன்னிறுத்துகிறது. கசப்பு குறைந்து உப்பு மேலிட்டால் காய்ச்சல். எனவே, கசப்பே காய்ச்சலுக்கு மருந்து. இந்திய மருத்துவமுறைகள் மீதான நம்பிக்கை இப்போது மக்களுக்கு மீண்டும் அதிகரித்து வருவது ஆரோக்கியமான செய்தி. சமீபகாலமாக மக்களை வதைத்து வரும் டெங்குவுக்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்துகளே இல்லை.
மாறாக இந்திய மருத்துவ முறைகளில், டெங்குவின் தாத்தாக்களை அழித்தொழிக்கவும் மருந்துகள் உண்டு. நிலவேம்புச்சாறு குடித்தால் எப்பேர்ப்பட்ட விஷக்காய்ச்சலும் விலகியோடி விடும். ரத்தத்தட்டுகள் குறைந்து வாய், மூக்கில் ரத்தம் வடிகிறதா? ஆடாதொடையை அரைத்து சுண்டைக்காய் அளவு சாப்பிட்டால் ரத்தத்தட்டுகள் அதிகரிக்கும். அதோடு, இருக்கவே இருக்கிறது பப்பாளிச்சாறு.
கேப்பேஜ் அடா
என்னென்ன தேவை?
பச்சரிசி - 1 கப்
புழுங்கல் அரிசி - 1 கப்
தேங்காய் - அரை மூடி
முட்டைக்கோஸ் - 300 கிராம்
காய்ந்த மிளகாய் - 20
பெருங்காயம் - 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
அரிசிகளைச் சேர்த்து ஊறவைத்துக் கொள்ளுங்கள். தேங்காயைத் துருவிக் கொள்ளுங்கள். முட்டைக்கோஸை பொரியலுக்கு நறுக்குவது போல சிறிதாக நறுக்கிக்கொள்ளுங்கள். ஊறவைத்த அரிசியோடு தேங்காய், புளி, மஞ்சள்தூள், மிளகாய் அனைத்தையும் சேர்த்து கரகர பதத்தில் அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த மாவில் உப்பு, பெருங்காயத்தூள், முட்டைக்கோஸ் சேர்த்து லேசாக தண்ணீர் சேர்த்து அடைமாவு பதத்துக்கு கலக்கிக் கொள்ளுங்கள். இட்லிச்சட்டியை அடுப்பில் வைத்து, உள்ளே வாழை இலைகளைப் பரப்பி, மாவை ஊற்றி முக்கால் மணி நேரம் ஆவியில் வேக வையுங்கள். சுவையான கேப்பேஜ் அடா ரெடி!
‘கேப்பேஜ் அடா’ பற்றி எழுதும்போது மருத்துவத்தைப் பற்றி சொல்வதற்கு அவசியம் இருக்கிறது. கொங்கன் பகுதியில் முட்டைக்கோஸை கேப்பேஜ் என்றுதான் சொல்கிறார்கள். முட்டைக்கோஸ் அற்புதமான இயற்கை மருந்து. டெங்குவுக்கு மட்டுமல்ல... புற்றுநோய்க்கும் அதில் மருந்து ஒளிந்திருக்கிறது என்கிறார்கள். அதன் உடலெங்கும் முக்கிய உயிர்ச்சத்தான ரிபோப்ளோவின் நிறைந்திருக்கிறது. பல நாடுகளில் இதை சமைக்காமல் சாப்பிடுகிறார்கள்.
டயட் உணவில் முட்டைக்கோஸ் ஜூஸ் பிரதானமாக பயன்படுகிறது. கேரளாவில் ஓலன் உள்ளிட்ட பல சைட் டிஷ்களில் முட்டைக்கோஸ் இடம்பெறுகிறது. கேப்பேஜ் அடா கொங்கன் ஸ்பெஷல். சற்று காரமாக இருந்தாலும் சுவை தனித்துவமாக இருக்கிறது. மாலைநேரத்தில் சாலையோர உணவகங்களில் இது கிடைக்கிறது. இதற்குத் துணை தேவையில்லை. சில உணவகங்களில் அப்பளம் பொரித்த எண்ணெயை இதன் மேல் ஊற்றித் தருகிறார்கள். வித்தியாசமான வாசனை... வித்தியாசமான சுவை!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
![-](https://2img.net/i/empty.gif)
» இயற்கை மருத்துவம்
» இயற்கை மருத்துவம்
» இயற்கை மருத்துவம்
» கர்ப்பிணிகளுக்கான இயற்கை மருத்துவம்
» இயற்கை மருத்துவம்
» இயற்கை மருத்துவம்
» இயற்கை மருத்துவம்
» கர்ப்பிணிகளுக்கான இயற்கை மருத்துவம்
» இயற்கை மருத்துவம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum