தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிரிப்பு ஒரு மாமருந்து

Go down

சிரிப்பு ஒரு மாமருந்து Empty சிரிப்பு ஒரு மாமருந்து

Post  ishwarya Wed May 08, 2013 1:32 pm

பற்றற்றவர் பற்றி நின்ற பரம் பொருள்
கற்றற்றவர் கற்றுக் கருதிய கண்ணுதல்
கற்றற்றவர் சுற்றி நின்ற என் சோதியைப்
பெற்றுற்றவர்கள் பிதற் றொழிந்தாரே.

உலகில் பிற உயிரினங்களுக்கும் பசி உணர்ச்சிகளும் உயிரை தக்க வைத்திடும், மற்றும் உயிரைக் காப்பாற்றும் உணர்ச்சிகளும் மிகுந்து இருந்தாலும் மனித இனம் அதையும் மீறி பேசும் வல்லமை பாடும் வல்லமை, சிரித்திடும் கலையை அறிந்திருக்கிறான்.
சிரித்திடும் சமயம் நமது முக அசைவுகள் அனைத்தும் தைராய்டு, பிட்யூட்டரி சுரப்பிகளின் திசுக்களை இயல்பாக்கி அமைதிப்படுத்துகின்றன. மேலும் 14 தசைகள் மட்டும் அச்சமயம் இயங்குகின்றன. பாரா சிம்பதடிக் நரம்புகள் ஆட்சி புரிகின்றன.கோபம் உச்சநிலை அடையும் சமயம் 100க்கும் மேற்பட்ட தசைகள், நாடி நரம்புகள் வேகம் கொண்டு சிம்பதடிக் நரம்புகள்(தானியங்கி) முறுக்கேறி அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுகிறது உடலில் இரத்தத்தில் அமிலம் மிகுகிறது.

எனவே நாம் வாழ்வில் நமது உணவின் அங்கம் போல் சிரிப்புக்கு, சிரிப்புக் கலையைக் கற்பதற்கு, கடைப்பிடிக்க சில நிமிடங்களாவது ஒதுக்கிடலாம்.
பிuனீணீக்ஷீs சிறீuதீ சிரிப்பு சங்கத்தில் சேரலாம்.
வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும். துன்பம் வரும் சமயமும் துவளாமல் சிரிப்புடன் எதிர் கொள்வது ஓர் அரிய கலை. அற்புதக் கலை.சிரிப்பு அலைகள் நம்மிடம் பிறரை ஈர்க்கும். கவலை அலைகள் பிறரை நம்மிடம் இருந்து விரட்டும்.சந்தோஷ அலைகள் நம்மை சுற்றி பாஸிடிவ் கரண்ட்டை பரப்பும்.
சோக அலைகள் நம்மைச்சுற்றி நெகடிவ் கரண்ட் தரும்.
எது தேவை முடிவு செய்யுங்கள் & சிரிப்பதற்கு கூட பயிற்சிகள் தேவைப்படுகின்றன. ஐந்து நிமிடம் காலையில் சிரித்துப் பழகலாம்.

நீங்கள் மகிழ்ச்சியாக, சந்தோஷமாக, சிரிக்கும் சமயம் மட்டுமே உங்கள் வீட்டில் இருந்து வெளி வாருங்கள். மகிழ்சி அலைகளைப் பரப்புங்கள் என்கிறார் சுவாமி விவேகானந்தர்.சோக அலைகள், துக்க சுவடுகளை, கவலை எண்ணங்களை வீட்டில் புதையுங்கள். வெளி உலகில் வந்து பரப்பாதீர்கள் என அறிவுறுத்துகிறார். ஆனால் நாம் யாரைப் பார்த்தாலும் நமது சோகக் கதையை கவலை மூட்டையை துக்க வியாபாரத்தை ஆரம்பிக்கிறோம்.

இனி வாழ்வில் இன்று முதல் சிரிப்பு வியாபாரம் தொடங்கலாம். அதனால் ஒரு நஷ்டமும் இல்லை. இதில் லாபம் மட்டுமேகிட்டும். இது உறுதி.அதிலும் பிறர் மனம் புண்படாத நிலை சிரிப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் தரலாம். உயிர் எழுத்துக்களை அ முதல் ஓ வரை வரிசையாக தொடர்ந்து வேகமாக உச்சரித்தால் சிரிப்பு அலைகள் உருவாகும்.
நம்மை சுற்றி நடக்கும் தவறான நிகழ்ச்சிகளில் ஈடுபடாமல் நாம் சாட்சியாக நிற்கும் சமயம் பல உண்மைகள் புரியும். பல நேரம் நமது தேவையே பிறக்கு தேவையிருக்காது. மேலும் நம்மால் ஏற்பட்ட தொல்லையும் நம் உறவினர்கள், நண்பர்களுக்கு குறையலாம்.

நாம் பொருள் உதவிகளை கேட்காமல் கொடுக்க வேண்டும்.நமது ஆலோசனை உதவிகளை மூன்று முறை கேட்ட பிறகே கொடுக்க வேண்டும்.இவ்விஷயத்தில் நாம் பல நேரம் மாறி தவறி விடுகிறோம்.சிரித்துப் பழக வேண்டும்.சிறுவர்களிடம் சிரித்துப் பழக வேண்டும்.சிறு குழந்தைகளைப் பார்த்து சிரித்துப் பழக வேண்டும்.சினம் அடையும் சமயம் சிரித்துப் பழக வேண்டும்.செயல்படும் போது சிரித்த முகத்துடன் பழகவேண்டும்.சிரிப்பு நமது வாழ்வின் மூச்சாக வேண்டும்.சோகம் நமது ஆரோக்கியச் செல்வத்தைக் குறைக்கும்.சிரிப்பு நமது ஆரோக்கியச் செல்வத்தை உயர்த்தும்.'சிரித்து வாழ வேண்டும். பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே' என்ற சிந்தனையுடன் சிரிப்பு வியாபாரத்தை இன்று தொடங்குங்கள். முதலில் வீட்டு உறவினர்களிடம் சிரிப்பு வியாபாரத்தை தொடங்குகள். எளிய வியாபாரம் & சிறப்பான உத்திகள்.கோப அலைகள் அனைத்தையும் சிரிப்பு அலைகளாக மாற்ற முயற்சி செய்யுங்கள். அது ஒரு அற்புதக் கலை.
வாழ்க்கை வானம் உங்களுக்கு வசப்படும் தூரந்தான். துணிச்சலின் சொந்தக்காரராக மாறிடுவீர்கள்.மகிழ்சியின் பொக்கிஷதாரராக ஆகிவிடுவீர்கள்.அதற்கான வழி தெரியவில்லையா? & இயற்கை உணவுகளும், கனி உணவுகளும் அப்பாதையை வெளிச்சம் போட்டுக் காட்டும். இயற்கை வாழ்வியல் வளமாக வழி நடத்திச் செல்லும். நாம் அதற்குத் தயாரா? சிரிக்கும்போது நைட்ரஜன் காற்று கூட நமக்கு சக்தி தரும். காற்றாக மாறும் வல்லமையைப் பெறுகிறோம். சிரித்துப் பழகுகிறவர்களுக்கு உணவின் தேவை குறைகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum