சுடச்சுட இட்லி மஞ்சூரியன் !
Page 1 of 1
சுடச்சுட இட்லி மஞ்சூரியன் !
தமிழர்களின் அற்புதமான உணவு இட்லி. இட்லி சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் அறியப்பட்டு வந்த ஒரு உணவு பதார்த்தம் ஆகும்.
இட்லி மீந்தால் உப்புமா கிண்டவோ, வேறு என்ன செய்யலாம் என்றோ யோசிக்க வேண்டாம். இட்லியை கொண்டு செய்யப்படும் ஒரு உணவு தான் இட்லி மஞ்சூரியன். வாங்க சுடச்சுட இட்லி மஞ்சூரியன் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள்:-
இட்லி - 6
மைதா மாவு - 1 டேபிள்ஸ்பூன்
கடலை மாவு - 1 டேபிள்ஸ்பூன்
கார்ன் ப்ளோர் - 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி - 1 துண்டு
பச்சை மிளகாய் - 5
பூண்டு - 5 பல்
முந்திரி - 10
டொமேட்டொசாஸ் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:-
இட்லியை விரல் நீளத் துண்டுகளாக கட் செய்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு பேசினில் மைதா மாவு, கார்ன் ப்ளவர், கடலை மாவு மூன்றையும் எடுத்துக் கொள்ளவும்.
இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், முந்திரி அரைத்து மாவில் சேர்க்கவும்.
டொமேட்டோ சாஸ், உப்பு சேர்த்து கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் இட்லித்துண்ட்களை கலவையில் முக்கி எண்ணெயில் போட்டு எடுக்கவும்.
சுடச்சுட இட்லி மஞ்சூரியன் தயார்.
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையைத் தூவியும் பரிமாறலாம். இட்லியை பொரிக்காது வதக்கியும் போடலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum