ஆலங்குடி குருபரிகார கோவிலில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடங்கியது
Page 1 of 1
ஆலங்குடி குருபரிகார கோவிலில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடங்கியது
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே உள்ளது ஆலங்குடி. இங்கு ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவில் உள்ளது. தேவாரப்பாடல் பெற்ற தலம். நவக்கிரகங்களில் குருபகவானுக்கு பரிகாரத்தலமாக விளங்குகிறது.
வருடந்தோறும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் செய்யும் நாளில் இக்கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெற்று வருகிறது. இந்த வருடமும் குருபகவான் வருகிற 17-ந் தேதி மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பிரவேசம் செய்கிறார்.
இதனை முன்னிட்டு குருப்பெயர்ச்சியின் முதல்கட்ட லட்சார்ச்சனை விழா நேற்று தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த முதல்கட்ட லட்சார்ச்சனை வருகிற 14-ந் தேதி வரையும், மீண்டும் குருப்பெயர்ச்சிக்கு பின்னர் வருகிற 23-ந் தேதி தொடங்கி ஜூன் 1-ந் தேதி முடிய 2-வது கட்ட லட்சார்ச்சனை விழாவும் நடைபெறுகிறது.
ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் லட்சார்ச்சனையில் பங்கேற்கலாம். குருப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு கோவில் முன்புறம் நீண்ட தகரத்தால் ஆன பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.
குருப்பெயர்ச்சி விழாவில் கலந்து கொள்ள வருகை தரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசின் அனைத்து துறைகளும் பல்வேறு வசதிகளை செய்ய முன்வந்துள்ளது. விழா ஏற்பாடுகளை உதவி ஆணையர் மற்றும் செயல்அலுவலர் செ.சிவராம்குமார் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» ராகு பெயர்ச்சியையொட்டி திருநாகேஸ்வரத்தில் லட்சார்ச்சனை விழா
» ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் 28-ந் தேதி குருப்பெயர்ச்சி விழா
» வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கியது
» ஆலங்குடி - திட்டை கோவில்களில் நாளை குருப்பெயர்ச்சி விழா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum