தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆரோக்கியமான இளமைக்கு...

Go down

ஆரோக்கியமான இளமைக்கு... Empty ஆரோக்கியமான இளமைக்கு...

Post  ishwarya Tue May 07, 2013 2:08 pm

அனைவருக்குமே தாம் எப்போதும் இளமையாக... அழகாக... ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்ற ஆசையிருக்கும். குறிப்பாக பெண்களுக்கு இது ஒரு கனவாகவே இருக்கும். சரி... இளமையாக இருக்க என்ன செய்ய வேண்டும்...

* ரொம்ப ஈஸி..! தினமும் காலை 5 மணிக்கு எழுந்து பழகுங்கள். எழுந்தவுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் குடியுங்கள். பிறகு அரை மணி நேரம் யோகாசனம் செய்யுங்கள். மிகவும் எளிதான... உங்களுக்குத் தெரிந்த யோகாசனம் செய்தால் போதும்.

* காலை 8 மணிக்குள் ஆவியில் வேகவைத்த உணவை சாப்பிடுங்கள். பின்னர் 11 மணிக்கு ஏதாவது ஒருவகை கீரை சூப் சாப்பிடுங்கள்.

* மதியம் 12 முதல் ஒரு மணிக்குள் மதிய உணவு சாப்பிடுங்கள். கொஞ்சம் சாதம், நிறைய காய்கறி என்று சாப்பிட்டால் போதும்.

* மாலை 5 மணிக்கு அரை மணி நேரம் உங்களுக்கு தெரிந்த யோகாசனம் செய்யுங்கள். அதன் பின்னர் 6 மணிக்கு கொஞ்சம் வேகவைத்த நிலக்கடலை சாப்பிடுங்கள். இரவு 8 மணிக்கு இரண்டு சப்பாத்தி சாப்பிடுங்கள்.

* இதுவே உங்களுடைய இளமை மெனு! தினமும் கண்களுக்கு கொஞ்சம் பயிற்சி கொடுத்தால் அழகாக இருக்கும். இரவில் வெள்ளரிக்காயை எடுத்து, வட்டமாக நறுக்கி கண்களை மூடி இமைகளுக்கு மேல் வைத்து தூங்கவும்.

* காலையில் எழுந்தவுடன், கண்களை நன்றாகத் திறந்து விழிகளை மேலும் கீழும், சுற்றிலும் உருட்டி பயிற்சி எடுக்க வேண்டும்.

* பின்னர் கண்களைச் சுற்றி கொஞ்சம் விளக்கெண்ணையை தடவிவிடவும். இதை தினந்தோறும் செய்து வந்தால் கண்கள் பொலிவுடன் அழகாக இருக்கும்.

* கரிசலாங்கண்ணி இலையுடன் துவரம் பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டால் கண்பார்வை தெளிவாகும். தினமும் தேங்காய் எண்ணையை விரல்களுக்கும், நகங்களுக்கும் வைத்து மசாஜ் செய்யவும்.

* வாரத்திற்கு மூன்று முறை, வெந்நீரில் உடம்பிற்கு போடும் சோப்பை கொஞ்சம் கரைத்து, அதில் கை, கால் விரல்களை 15 நிமிடம் ஊற வைத்து சுத்தம் செய்யவும்.

* தினமும் ஏதாவது ஒரு பழம் சாப்பிடவும். குறிப்பாக மாதுளை, திராட்சை, சீத்தாப்பழம், ஆப்பிள், மங்கூஸ், ஆரஞ்சு ஆகியவற்றை வாரத்திற்கு ஒரு முறையாவது சாப்பிடவும். நாம் சாப்பிடும் உணவு மூலமாகவே அழகை அதிகப்படுத்த முடியும்.

* வைட்டமின் மற்றும் தாதுப் பொருட்கள் உள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக் கொண்டால் உடல் பொலிவு கூடும். தினமும் காய்கறி மற்றும் பழங்களை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.

இதெல்லாம் செஞ்சு பாருங்க, இளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பீங்க.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum