வேண்டியது - வேண்டாதது
Page 1 of 1
வேண்டியது - வேண்டாதது
உடற்பயிற்சி செய்தால் உடல் மட்டுமின்றி உள்ளமும் புத்துணர்ச்சி பெறும் என்பதை அதை செய்து வருபவர்களுக்கு நன்றாக தெரியும்.
உடற்பயிற்சியில் பல்வேறு வகைகள் உள்ளன. ஒவ்வொரு உறுப்பையும் பாதுகாக்க தனித்தனியாக பயிற்சிகள் உள்ளன. உடல் எடையை குறைக்க மட்டும் 35 வகையான பயிற்சி முறைகள் இருக்கின்றன.
உடற்பயிற்சியை செய்யும் முன், முதலில் இந்த பயிற்சிகளின் மீது நமக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும். ஏனோ தானோ என்று செய்தால் பலன் கிடைக்காது. விடாமுயற்சியோடு பயிற்சிகளை மேற்கொள்ள பழகிக் கொள்ள வேண்டும். மனம் தளரவோ, ஒதுங்கி விடவோ கூடாது. மேலும், உடற்பயிற்சிக்கு தகுந்த சூழ்நிலை அவசியம்.
இயற்கை காற்றோட்ட வசதி வேண்டும். வீட்டில் ஜன்னலை திறந்து வைத்து கொள்ளுங்கள். பயிற்சியின் போது மூக்கின் வழியாக மட்டுமே சுவாசிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் வாயினால் சுவாசிக்கக் கூடாது. மூச்சை உள்ளுக்கு இழுத்தலும் வெளியே விடுதலும் ஒரே சீராக நிதானமாக நடைபெற வேண்டும்.
புதிதாக பயிற்சி செய்பவர்களுக்கு ஆரம்பத்தில் சில நாட்களுக்கு உடல்வலி இருக்கும். அதனை பெரிதுபடுத்த வேண்டியதில்லை. இதற்காக பயிற்சியை நிறுத்தி விடக் கூடாது. சிலர் சாப்பிட்ட பின்பு உடற்பயிற்சி மேற்கொள்வார்கள். இது தவறானது. சாப்பிட்டவுடன் ஒரு போதும் உடற்பயிற்சி செய்யக் கூடாது. இதேபோல், பயிற்சி முடிந்த உடனேயும் உணவு உட்கொள்ளக் கூடாது.
சுமார் 20நிமிட நேரம் கழிந்த பின்னரே முதலில் நீர் அருந்திவிட்டு பின்னர் உணவு உட்கொள்ள வேண்டும். பயிற்சிகளை அவசரமாகவும் படபடப்போடும், முரட்டுத்தனமாகவும் செய்யக்கூடாது. பயிற்சிகளை நிதானமாக செய்யப் பழகிக் கொள்ள வேண்டும். ஆரம்ப காலத்தில் குறைந்த எண்ணிக்கையில், குறைந்த நேரத்திற்கு பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும். பிறகு படிப்படியாக நேரத்தையும், எண்ணிக்கையையும் கூட்டிக் கொண்டே வரவேண்டும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வேண்டியது - வேண்டாதது
» கோவில்களில் கடைபிடிக்க வேண்டியது...
» தினமும் பெண்கள் கூற வேண்டியது
» தினமும் பெண்கள் கூற வேண்டியது
» தெய்வத்திடம் கேட்க வேண்டியது
» கோவில்களில் கடைபிடிக்க வேண்டியது...
» தினமும் பெண்கள் கூற வேண்டியது
» தினமும் பெண்கள் கூற வேண்டியது
» தெய்வத்திடம் கேட்க வேண்டியது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum