தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பார்த்து வாங்குங்க!

Go down

 பார்த்து வாங்குங்க! Empty பார்த்து வாங்குங்க!

Post  ishwarya Tue May 07, 2013 1:00 pm

‘கேவீட் எம்ப்டார்’ என்று லத்தீனில் ஒரு பழமொழி உண்டு. அதற்கு, ‘வாங்குபவர்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்’ (Let the buyer beware) என்று அர்த்தம். ‘அந்தக் கடையிலே காய் வாங்கினேன். நல்லாவே இல்லை’ என்று சொன்னால், ‘நீதான் நல்ல கடையா பார்த்து வாங்கணும்’ என்கிற பெரியவர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள்.

கடையில் வாங்குகிற ஒவ்வொரு பொருளுக்கும் இது பொருந்தும். நுகர்வோருக்கான உரிமைகள், சட்டங்கள், நுகர்வோர் பாதுகாப்பு மையங்கள், அமைப்புகள் என்று எத்தனையோ இருக்கின்றன. அது உப்போ, பட்டுப் புடவையோ... மோசமானதை வாங்கிவிட்டுப் பின்னால் அவதிப்படுவதைவிடமுன்னெச்சரிக்கையோடு இருப்பது நல்லதுதானே! சரி...

ஷாப்பிங் செய்யும் போது கவனமாக இருப்பது எப்படி?

‘‘பெண்கள்தான் பொருட்களை அதிகம் வாங்குகிறார்கள். அவசர அவசரமாக பர்ச்சேஸ் செய்யும்போது குளறுபடி நடக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ‘ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம்’ என ஈர்க்கும் வாசகங்களை நம்பி எத்தனையோ பேர் ஏமாறுவது இன்றும் தொடர்கதையாக இருக்கிறது. எனவே, பெண்களுக்குக் கூடுதல் பொறுப்பும் விழிப்புணர்வும் தேவை’’ என்கிறார் கன்ஸ்யூமர் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவின் சேர்மன் ஆர்.தேசிகன். அவர் அளிக்கும் ஷாப்பிங் டிப்ஸ் இதோ...

கேஸ் இணைப்புப் பெறும்போது, அது அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமா என்பதை முதலில் உறுதி செய்துகொண்டு, பிறகு பதிவு செய்யுங்கள். ‘சிலிண்டர் சப்ளை செய்ய வருபவர்கள் எடை போடும் கருவியைக் கையோடு எடுத்து வர வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதனால் சிலிண்டர் கொண்டு வருபவரிடம் ‘எடை போட்டுத்தான் வாங்குவேன்’ என்று உறுதியாகச் சொல்லிவிடுங்கள்.

சீல் உடைக்கப்பட்டு, எடை குறைவாக இருப்பது தெரிந்தால், உடனே நுகர்வோருக்கான அமைப்பில் புகார் தரலாம். சிலிண்டர் நிறுவனம் வழங்கிய ‘ப்ளூ புக்’ பதிவேட்டில் உடனுக்குடன் எழுதி அப்டேட் செய்து கொள்ளுங்கள். வருடத்துக்கு 9 சிலிண்டர்கள் சரியான தேதியில் டெலிவரி செய்யப்பட்ட தகவல் அந்தப் புத்தகத்தில் இருக்க வேண்டும். ‘விலையை விட அதிகமாகப் பணம் தர வேண்டும்’ என்று வாடிக்கையாளர்கள் நிர்ப்பந்திக்கப்
பட்டால் உடனே ஏஜென்சிக்குப் புகார் தெரிவிக்கலாம்.

இலவசம், டிஸ்கவுன்ட், ஆஃபர் இருக்கிறதா என்று பார்ப்பதை விட பொருளின் தரம் சரியாக இருக்கிறதா என்பதைப் பரிசோதிக்க வேண்டும். ஸ்நாக்ஸ், ஜூஸ், பிரெட் போன்றவற்றில் தயாரிக்கப்பட்ட தேதியையும், எக்ஸ்பயரி தினத்தையும் உற்றுக் கவனித்து, சரியாக இருந்தால் மட்டுமே வாங்க வேண்டும். எந்த விவரமும் இல்லாத, வெறும் பிளாஸ்டிக் கவரில் அடைத்து விற்கப்படும் பொருட்களை வாங்கி பணத்தை விரயமாக்காதீர்கள். அவை உடலுக்கும் உகந்தல்ல. அன்றாடம் உபயோகிக்கும் ஷாம்பு, சோப், பேஸ்ட் பொருட்களுக்கும் எக்ஸ்பயரி தேதி அவசியம். மளிகைப் பொருட்களில் கலப்படம் இருப்பது தெரிந்தால் உடனே நுகர்வோர் அமைப்பில் புகார் செய்யுங்கள்.

எந்தச் சேதாரமும் இல்லாமல், பார்ப்பதற்கு புத்தம்புதுசாக கடையில் இருக்கும். வீட்டில் டெலிவரி ஆன பிறகுதான் அதில் பிரச்னை இருப்பது தெரியும். கடையிலிருந்து டெலிவரி ஆட்கள் வரும்போதே வாங்கிய பொருள் சரியாக இருக்கிறதா என்பதை முழுக்கப் பரிசோதித்து விடுங்கள். பழுது இருந்தால் வந்தவர்களிடமே திரும்ப ஒப்படைப்பது நல்லது.

மலிவு விலையில் கிடைக்கும் காஸ்மெட்டிக்ஸ் பொருட்களால் அலர்ஜி, தோலில் பிரச்னை போன்றவை வந்து அவஸ்தைப்பட வேண்டியிருக்கும். அதனால், விலை குறைவு என்பதற்காக வாங்குவதை விட, தரமான பிராண்டட் பொருட்களை வாங்குங்கள். அந்த ஒப்பனைப் பொருட்கள் உங்கள் சருமத்துக்கு ஏற்றவைதானா என்பதையும் உறுதி செய்து பயன்படுத்துங்கள். சானிடரி நாப்கின் வாங்கும் போதும் கவனம் அவசியம்.

பெண்கள் அதிகம் ஏமாந்து போவது பட்டுப்புடவை விஷயத்தில். டிசைன் பார்த்து வாங்குவதில்தான் அதிக கவனம் இருக்கும். அதனாலேயே தரமில்லாத புடவையை வாங்கிவிட்டு அவதிப்படுவார்கள். ‘சில்க் மார்க்’ முத்திரை இருக்கிறதா என்பதைப் பரிசோதிக்க வேண்டும். சுருக்கம் ஏற்படாத, சாயம் போகாத துணிகளா என்பதையும் உரிய முறையில் சோதித்துப் பார்த்த பிறகே பட்டுப்புடவை வாங்க வேண்டும்.

‘இருக்கும் இடத்திலிருந்து ஆர்டர் செய்தாலே வீடு தேடி வரும்’ என்கிற வசதியில் ஆன்லைன் ஷாப்பிங் மோகம் இன்றைய தலைமுறைக்கு அதிகமாகியிருக்கிறது. அதன் காரணமாகவே, பலர் தரமில்லாத பொருட்களை வாங்கி, பணத்தையும் இழந்திருக்கிறார்கள். ஒரு பொருளை வாங்குவதற்கு முன், இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் முகவரி, தொலைபேசி எண் சரியானவையா, நிறுவனம் நம்பகமானதா என்பதை சரி பார்த்துவிட வேண்டும். காஸ்மெட்டிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை முடிந்த வரை நேரடியாகச் சென்று வாங்குவது நல்லது. எங்களிடம் வரும் புகார்களில் 80 சதவிகிதத்துக்கும் அதிகமானவை ஆன்லைன் மோசடிகள்!

ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட், ஷாப்பிங் மால், தியேட்டர்களில் தண்ணீர் பாட்டில், ஸ்நாக்ஸ், குளிர்பானங்கள் போன்றவற்றை கூடுதல் விலைக்கு விற்பார்கள். ‘விலை அதிகமாக இருக்கிறதே!’ என்று கேட்டால் ‘இங்கே இப்படித்தான்’ என்று அலட்சியமாக பதில் சொல்வார்கள். அப்படிக் கூடுதல் விலைக்கு விற்பது தவறு. இந்த முறைகேட்டையும் நுகர்வோர் அமைப்பின் கவனத்துக்குக் கொண்டு போகலாம்.

முறையான ரசீது அவசியம். ‘‘வாடிக்கையாளர்கள் தங்கள் பிரச்னைகளை எங்கள் நுகர்வோர் அமைப்பில் பகிர்ந்து கொள்ள ‘ஹெல்ஃப்லைன் வசதி’யை புதிதாகத் தொடங்கியிருக்கிறோம். 24 மணி நேரமும் இயங்கும் இந்த உதவி மையத்தில் (( 044-66334346) புகாரை உரிய முறையில் பதிவு செய்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்கிறார் தேசிகன்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum