தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மூளையைப் பாதிக்கும் பட்டணத்து வாழ்க்கை!

Go down

மூளையைப் பாதிக்கும் பட்டணத்து வாழ்க்கை! Empty மூளையைப் பாதிக்கும் பட்டணத்து வாழ்க்கை!

Post  ishwarya Tue May 07, 2013 12:41 pm

பட்டிக்காட்டில் வாழும் மனிதர்களை விட பட்டணத்தில் வசிக்கும் மனிதர்கள் அதிக மனஅழுத்தத்திற்கு உள்ளாவதாக ஆய்வொன்று தெரிவிக்கிறது.

பட்டணத்தில் காணப்படும் வேறுபட்ட சமூக அமைப்பு, அதிக ஒலி மற்றும் மக்கள் நெருக்கடி ஆகியவை காரணமாக மூளையின் அதிக உணர்வு மிக்கதான மற்றும் மனஅழுத்தத்துடன் தொடர்பு கொண்ட அமைக்டலா என்ற பகுதி அதிகமாக செயல்படுவது தெரிய வந்துள்ளது.

மேலும், உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் பகுதியாகவும், சுற்றுப்புறத்தோடு தொடர்பு கொண்டதாகவும் விளங்கும் மூளையின் மற்றொரு பகுதியான சிங்குலேட் கார்டெக்ஸ், பட்டணத்தில் பிறந்தவர்களிடம் தேவையற்ற வகையில் அதிகமாக செயல்படுவதும் ஆய்விலிருந்து தெரிய வருகிறது.

வரும் 2050ஆம் ஆண்டிற்குள் ஏறக்குறைய 70 விழுக்காட்டினர் பேர் பட்டன வாழ்க்கைக்கு வந்து விடுவர் என கூறப்படுவதால் ஒழுங்கற்ற மனநிலை, எதிலும் அதிக ஆர்வமின்மை போன்ற பாதிப்புகள் ஏற்படுவதை தவிர்க்க சிறந்த மனநலத்துடன் வாழ்வதற்கு ஏற்ப பட்டனங்களை தற்போதிருந்தே வடிவமைத்து அதற்கேற்ற வகையில் வாழ்க்கை முறையினை அமைத்துக் கொள்வது நலம் தரும் என ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum