மாதவிலக்காலும் ரத்த சோகை உண்டாகும்
Page 1 of 1
மாதவிலக்காலும் ரத்த சோகை உண்டாகும்
ரத்தசோகை என்பது இந்தியர்களிடையே மிகவும் பரவலாக காணப்படும் ஒரு குறைபாடு. ரத்தத்தில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அல்லது ஹீமோ குளோபினின் அடர்த்தி குறைவதே ரத்தசோகை என்று அழைக்கப்படுகிறது. ரத்தத்தின் சிவப்பணுக்களுக்குள் இருக்கும் ஒரு புரதம் தான் ஹீமோகுளோபின். இதில் இரும்புசத்து இருக்கும்.
இதுதான் ரத்தத்தில் ஆக்ஸிஜனைக் கடத்துகிறது. பெண் குழந்தைகளுக்கு சிறு வயது முதலே அவர்கள் உடல் வளர்ச்சிக்கு தேவையான சத்தான உணவுகள் இன்றி வளர்கின்றனர். இதனால் அவர்களின் உடல் வளர்ச்சி மாறுபாட்டின் போது அவர்கள்போதிய சத்தின்றி உடல் நலம் குன்றி காணப்படுகிறார்கள்.
இதனால் அவர்கள் பூப்பெய்தவுடன் மேலும் பல பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.இரும்பு சத்து குறைவினால் அதாவது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறைவதால் உடல் சோர்வடைந்து விடுகிறது. மேலும் பெண்களுக்கு மாத விலக்கு காலங்களில் ஏற்படும் உதிர இழப்பால் எலும்புகள் பலமிழக்கின்றன.
ரத்தத்தில் பித்தம் அதிகரித்து ரத்தம் சீர்கேடு அடைந்து தலைவலி, தலை சுற்றல், வாந்தி, மயக்கம் ஏற்படுகிறது. மேலும் கர்ப்பப்பை வீக்கம், ஒழுங்கற்ற உதிரப்போக்கு, வெள்ளைபடுதல் போன்றவை ஏற்படுகிறது. இதனால் ரத்தசோகை அதாவது அனீமியா ஏற்படுகிறது. ரத்தசோகை ஏற்பட பல காரணங்கள் இருக்கின்றன.
முதல் காரணம் ரத்தம் அதிக அளவில் வெளியேறிக்கொண்டே இருப்பது. விபத்து தவிர இதற்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன. சாதாரணமாக ஒரு ரத்த சிவப்பணு 110-120 நாட்கள் வரை உயிரோடு இருக்கும். அதற்கு பிறகு சிதைந்து விடும். ஆனால் சில நோய்களின் காரணமாக ரத்த சிவப்பணுக்கள் மிகச் சீக்கிரமாகவே இறந்து விடும்.
அப்படி நடக்கும் போது எலும்பு மஜ்ஜைகள் அதிக ரத்த செல்களை உருவாக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றன. அப்படி எலும்பு மஜ்ஜைகளால் அந்த அளவுக்கு ரத்த செல்களை உருவாக்க முடியாவிட்டால் ஹீமலோலிசிஸ் என்ற ரத்த சோகை ஏற்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியில் ஏற்படும் குறைபாடு, நோய் தொற்று சில மருந்துகள், நச்சு பொருள்கள் ஆகியவற்றால் ஹீமமோசிலிஸ் ஏற்படலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ரத்த சோகை
» ரத்த சோகை
» பெண்களை பாதிக்கும் ரத்த சோகை
» ரத்த சோகை தீர்க்கும் காய்கனிகள்
» ரத்த சோகை நோய்க்கு
» ரத்த சோகை
» பெண்களை பாதிக்கும் ரத்த சோகை
» ரத்த சோகை தீர்க்கும் காய்கனிகள்
» ரத்த சோகை நோய்க்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum