தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இலங்கை நாடாளுமன்றக் குழுவிடம் மீரா குமார் மன்னிப்பு - தமிழர்களின் உணர்வுகளை காலில் போட்டு மிதித்தார்

Go down

 இலங்கை நாடாளுமன்றக் குழுவிடம் மீரா குமார் மன்னிப்பு - தமிழர்களின் உணர்வுகளை காலில் போட்டு மிதித்தார் Empty இலங்கை நாடாளுமன்றக் குழுவிடம் மீரா குமார் மன்னிப்பு - தமிழர்களின் உணர்வுகளை காலில் போட்டு மிதித்தார்

Post  ishwarya Mon May 06, 2013 2:30 pm



இந்தியா வந்துள்ள இலங்கை நாடாளுமன்றக் குழுவினருக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்களவையில் அதிமுக உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்.இதற்காக அவர்களிடம், மக்களவைத் தலைவர் மீரா குமார் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

இந்திய நாடாளுமன்ற நடவடிக்கைகளை காண்பதற்காக, இலங்கை நாடாளுமன்றத்தின் உயர்நிலைக் குழுவினர் தில்லி வந்துள்ளனர். மக்களவை திங்கள்கிழமை கூடியதும், மீராகுமார் அவர்களை உறுப்பினர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.அப்போது, இருக்கையில் இருந்து எழுந்த அதிமுக எம்.பி.க்கள், இலங்கை நாடாளுமன்றக் குழுவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோஷம் எழுப்பினர். அப்போது பேசிய மீரா குமார், இருநாடுகளுக்கு இடையே நல்லுறவை வளர்ப்பதற்காக அவர்கள் வந்துள்ளனர் என்றார்.

பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக மக்களவைச் செயலர் ஓர் அறிக்கை வெளியிட்டார்.

அதில் மக்களவையில் நிகழ்ந்த சம்பவத்தால், வேதனையடைந்ததாகவும் இதற்காக இலங்கை நாடாளுமன்றக் குழுவிடம் மீரா குமார் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழரை கோடி தமிழர்களின் உணர்வை இந்திய காங்கிரஸ் அரசு மீண்டும் மீண்டும் உதார்சினப்படுத்துகிறது.

சபாநாயகர் மீரா குமார் அவர்களே...

இந்தியா என்பது இருபத்தெட்டு மாநிலங்களை உள்ளடக்கியது. அதில் தமிழ்நாடும் ஒன்று. எங்கள் உணர்வுக்கும் கொஞ்சம் மதிப்பு கொடுங்கள்... எங்கள் தொப்புள்கொடி உறவுகளை மிகவும் கொடூரமான முறையில் உலக வரலாற்றிலே இல்லாத அளவுக்கு மிகப்பெரிய இனப்படுகொலையை செய்த சிங்கள போற்குற்றவாளிகளை இந்திய நாடாளமன்றத்தில் அனுமதித்து, எங்களை முகம் சுளிக்க வைத்தது எதற்காக.

நீங்கள் என்ன அயல் கிரகத்தில் இருந்து வந்தவரா? இங்கு என்ன நடக்கிறது என்று உங்களுக்கு தெரியாத? தமிழக சட்டமன்றத்தில் இலங்கைக்கு பொருளாதாரத்தடை விதித்துள்ளது. ஆனால் தில்லியில் அவர்களுக்கு சிவப்புக்கம்பள வரவேற்ப்பு. எதற்காக இந்த செயல். நீங்கள் சேனல் 4 காணொளியை பார்க்கவில்லையா?. இந்தியாவில் இனப்பிரிவினையை தூண்டும் செயலாகவல்லவா இது இருக்கிறது?. உயரிய பதவியில் நீங்கள் இருப்பதால்... என்னால் உங்களை திட்டமுடியவில்லை. வாயில் நான் முனுமுனுப்பதை இங்கு தட்டச்சு செய்ய முடியவில்லை. ஏழரை கோடி தமிழர்களின் முதுகில் கத்தியால் குத்திவிட்டீர்கள் சபாநாயகர் அவர்களே..


இதற்காக ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியும் வருதபடுவீர்கள்........

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» காதலனுடன் இரவில் தங்கியதற்காக மொட்டை போட்டு மன்னிப்பு கேட்ட ஜப்பான் பாடகி! Pics,Vid
» “உன்னை சரண் அடைந்தேன்” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மீரா வாசுதேவன். இந்தி, மலையாள மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். மீரா வாசுதேவனுக்கும் பிரபல சினிமா ஒளிப்பதிவாளர் அசோக்குமார் மகன் விஷாலுக்கும் சில வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. தற்போது கு
» யாழ். மாவட்ட மீனவர்கள் பிரச்சனையை தொடர்பில் இந்திய குழுவிடம் கூட்டமைப்பு பேச மறுத்தது ஏன்!
» முக்கோண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு: இலங்கை அணியில் மஹ்ரூப், சானக்க
» தமிழர்களின் சொல்லும் இலக்கிய வளங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum