கழுதையின் தந்திரம் – ஈசாப் நீதிக்கதைகள் : Tamil Short Stories
Page 1 of 1
கழுதையின் தந்திரம் – ஈசாப் நீதிக்கதைகள் : Tamil Short Stories
ஒரு வியாபாரி உப்பு வாங்குவதற்காகத் தன் கழுதையைக் கடற்கரைக்கு ஓட்டிச் சென்றார். போகிற வழியில் ஓர் ஓடை இருந்தது.
திரும்பி வரும்போது கால்தவறிக் கழுதை ஓடையில் விழுந்தது. தண்ணீரில் உப்பு கரைந்து போனதால், கழுதை எழுந்த போது சுமையின் கனம் மிகவும் குறைந்திருந்தது.
வியாபாரி திரும்பிப்போய், இன்னும் கூடுதலாக உப்பைத் தனது கோணிகளில் நிரப்பிக்கொண்டான். வேண்டுமென்றே கழுதை மீண்டும் விழுந்து தனது பாரத்தைக் குறைத்துக் கொண்டது. எனவே அது வெற்றிகரமாகக் கனைத்தது.
வியாபாரிக்குக் கழுதையின் தந்திரம் புரிந்துபோகவே, மூன்றாம் முறையாக கடற்கரைக்கு அதை ஓட்டிச் சென்றான். அங்கே உப்புக்கு பதிலாகக் கடற்பஞ்சு மூட்டைகளை வாங்கினான். ஓடையை அடைந்ததும், மீண்டும் அதே தந்திரத்தைக் கழுதை செய்தது.
ஆனால் கடற்பஞ்சு தண்ணீரை உறிஞ்சிக்கொண்டு மிகவும் கனத்துப் போனது.
தான் செய்த தந்திரம் தன்மீதே பாயவே, கழுதை இரண்டு பங்கு பாரத்தைச் சுமந்தது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நீச்சல் தெரியாத பண்டிதர்! - சிறுகதை: Tamil Short Stories
» பூதம் காத்த புதையல் - சிறுகதை (Tamil Short Stories)
» சிலந்தி… சிலந்தி… - சிறுகதை Tamil Short Stories
» மனச்சோர்விலிருந்து விடுபட - Tamil Health Tips from Tamil Stories Blogspot
» Prose & Short Stories

Permissions in this forum:
You cannot reply to topics in this forum