கர்ப்பப்பை வீக்கம் ஏற்பட என்ன காரணம்?
Page 1 of 1
கர்ப்பப்பை வீக்கம் ஏற்பட என்ன காரணம்?
இனப் பெருக்கத்தின் மையமான கர்ப்பப்பை, மிக மென்மையான உறுப்பு. இரண்டு, மூன்று குழந்தைகள் பிறந்த பின்பு ஈஸ்ட்ரோஜன், புரோஜஸ்ட்ரான் போன்ற ஹார்மோன்களின் தூண்டுதலால் கர்ப்பப்பையின் நான்கு பக்க சுவர்களும் தடிமனாகி சிலருக்கு வீங்கும். இது இயற்கையானது. கர்ப்பப்பையின் உள்ளே சுவர் போன்று என்டோமெட்ரியம் என்ற `லேயர்' உள்ளது.
பஞ்சு பொதிபோல் காணப்படும் இந்த அடுக்கு, கரு வளருவதற்கு மிக இன்றியமையாததாகும். ஒவ்வொரு மாதமும் என்டோமெட்ரியம், கர்ப்பப்பைக்குள் உருவாகும். முதலில் 5 மி.மீ. அளவில் இருக்கும். பின்பு 9 முதல் 13 மி.மீ வரை வளரும். கருவாக்கம் நிகழாவிட்டால், இந்த என்டோமெட்ரியம் உதிர்ந்து மாதவிலக்கு உதிரமாக வெளியேறும். இது ஒவ்வொரு மாதமும் உருவாகி தொடரும்.
மனோபாஸ் காலம் வரை இது மாதாந்திர நிகழ்வாகும். கர்ப்பப்பையின் உள்ளே மயோமெட்ரியம் என்ற தசைப்பகுதி உள்ளது. என்டோமெட்ரியத்தின் கீழ் பகுதி லேயர் சிலருக்கு துண்டாகும். அப்போது மயோமெட்ரியம் தசைப் பகுதியின் உள்ளே மாதவிலக்கு திரவம் சென்றுவிடும். மாதவிலக்கு நாட்களில் அது வெளியே வர வழி இல்லாததால், உள்ளேயே தேங்கி உயிர் போகிற அளவுக்கு வலிக்கும்.
இப்படி கர்ப்பப்பை சுவருக்குள், மாதவிலக்கு தேங்கி பாதிப்பை ஏற்படுத்துவதைத்தான் அடினோமயோசிஸ் என்கிறோம். பொதுவாக 45-ல் இருந்து 48 வயதிற்குள் `மனோபாஸ்' ஏற்பட வேண்டும். 53 வயதாகியும் மாதவிலக்கு நிற்கவில்லை எனில் அதற்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக சுரக்கும் `ஹைப்பர் ஈஸ்ட்ரோஜன்' வெளிப்பாடுதான் காரணமாகும்.
அதற்கு உடனடியாக `டி அன்ட் சி' செய்து, அந்த திசுவை எடுத்து புற்றுநோய்க்கான சூழல் ஏதாவது இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டும். புற்றுநோய் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கர்ப்பப்பையை நீக்கிவிடுவது நல்லது. அதன் மூலம் நோயில் இருந்தும், மாதந்தோறும் உருவாகும் கடுமையான வலியில் இருந்தும் விடுதலை பெறலாம்.
கர்ப்பப்பையை நீக்கிவிட்டால், மாதவிலக்கு வருவது நின்றுவிடும். கர்ப்பப்பையை நீக்குவதற்கு பழைய முறையிலான பெரிய ஆபரேஷன்கள் தேவையில்லை. லேப்ராஸ்கோபி மூலம் `மார்ச்சுலேட்டர்' என்ற கருவியால் நவீன முறையில் நீக்கம் செய்துவிடலாம். இரண்டு நாட்கள் மட்டும் இதற்காக ஆஸ்பத்திரியில் தங்கினால் போதுமானது.
பொதுவாக சினைப்பைகளில் இருந்துதான் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரக்கும். அது இதயத்திற்கு பாதுகாப்பு தரவும், எலும்பு உறுதிக்கு தேவையான கால்சியத்தை உருவாக்கவும், ரத்தத்தில் சேரும் கொழுப்பை கரைக்கவும் தேவை. ஆனால் 48 வயதுக்குள் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு குறைந்து, 50 வயதுகளில் நின்று போவது இயற்கை.
நவீன ஆபரேஷன் மூலம் கர்ப்பப்பை, சினைப்பைகளை நீக்கிவிட்டு எலும்பு பலத்திற்கு கால்சிய சத்து எடுத்துக்கொள்ளவேண்டும். இதயம் மற்றும் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்காக உடற்பயிற்சி செய்யவேண்டும். வாழ்வியல் முறைகளிலும் வயதுக்கும், ஆரோக்கியத்திற்கும் ஏற்ற நல்ல மாற்றங்களை உருவாக்கிக் கொள்ளவேண்டும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கோமா நிலை ஏற்பட என்ன காரணம்?
» கோமா நிலை ஏற்பட என்ன காரணம்?
» ஃபுட் பாய்சன் ஏற்பட என்ன காரணம்?
» தோளில் தடிப்பு ஏற்பட காரணம்
» ஆண் மலட்டுத்தன்மைக்கு என்ன காரணம்?
» கோமா நிலை ஏற்பட என்ன காரணம்?
» ஃபுட் பாய்சன் ஏற்பட என்ன காரணம்?
» தோளில் தடிப்பு ஏற்பட காரணம்
» ஆண் மலட்டுத்தன்மைக்கு என்ன காரணம்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum