தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சூதுகவ்வும் படம் கதை பிடித்ததால் வயதான வேடத்தில் நடிக்கிறேன்: விஜய் சேதுபதி

Go down

சூதுகவ்வும் படம் கதை பிடித்ததால் வயதான வேடத்தில் நடிக்கிறேன்: விஜய் சேதுபதி Empty சூதுகவ்வும் படம் கதை பிடித்ததால் வயதான வேடத்தில் நடிக்கிறேன்: விஜய் சேதுபதி

Post  ishwarya Sat May 04, 2013 6:25 pm

விஜய்சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி ஜோடியாக நடிக்கும் படம் சூதுகவ்வும். ராதாரவி, சிம்ஹா, அசோக், ரமேஷ், நெல்லை சிவா ஆகியோரும் நடித்துள்ளனர்.

இப்படத்தை நலன் குமாரசாமி இயக்குகிறார். சி.வி.குமார் தயாரிக்கிறார்.

ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா, ஸ்டூடியோ சுரேஷ் ஆகியோர் இணைந்து இப்படத்தை வெளியிடுகின்றனர்.

சூதுகவ்வும் படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி நரைமுடி தாடியில் நாற்பது வயது நிரம்பியவராக வருகிறார். வயதான கேரக்டரில் நடிப்பது குறித்து கேட்டபோது விஜய்சேதுபதி கூறியதாவது:-

சூதுகவ்வும் கதையை முதலில் குறும்படமாக உருவாக்கி இருந்தனர். அப்போதே இந்த கதை எனக்கு தெரியும். இயக்குனர் நலன் குமாரசாமியும் எனது நண்பர்.

இந்த கதை படமாகும் போது நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதன்படி இந்த கேரக்டரை நானே கேட்டுவாங்கினேன். கதாநாயகன் ஆன பிறகு எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம். நாற்பது வயதாக இருந்தாலும் அறுபதி வயதாக இருந்தாலும் நடிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் தயாரிப்பாளர்கள் சிவா, சீனிவாசன் போன்றோர் பங்கேற்றனர்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum