தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கர்ப்பிணிகளே முட்டை சாப்பிடுங்க....

Go down

கர்ப்பிணிகளே முட்டை சாப்பிடுங்க.... Empty கர்ப்பிணிகளே முட்டை சாப்பிடுங்க....

Post  meenu Tue Jan 22, 2013 6:01 pm

கர்ப்பிணிகள் காலை நேரத்தில் முட்டை சாப்பிடுவது கருவில் உள்ள குழந்தையின் புத்திசாலித்தனத்திற்கு நல்லது. கர்ப்பிணிகள் தங்களின் நலனிற்காகவும், குழந்தைகளின் நலனிற்காகவும் எந்த மாதிரியான உணவுகளை உட்கொள்ளவேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

முட்டை போன்ற உணவுகளை காலை நேர டிபன் ஆக சாப்பிடுவது சிசுவின் ஆரோக்கியத்திற்கு நல்லது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முட்டையில் உள்ள கோலைன் சத்து 480 மி.கி. அல்லது 930 மி.கி. அளவுக்கு கிடைக்கும் வகையில் தினமும் முட்டை சாப்பிடுவது கர்ப்பிணிகளுக்கு நல்லது. கருவில் உள்ள சிசுவின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு கோலைன் முக்கிய பங்காற்றுகிறது.

ஒரு முட்டையில் முக்கியமாக மஞ்சள் கருவில் 125 மி.கி. அளவுக்கு கோலைன் பொருள் உள்ளது. புரதம், இரும்பு சத்து, ஃபோலேட் உள்ளிட்ட பல சத்துகள் முட்டையில் உள்ளதால், கர்ப்பிணிகள் நிறைய சாப்பிடலாம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இதனால் சிசுவின் நியூரோ எண்டோகிரைன் சுரப்பு சீராகிறது. ஆரோக்கியமான மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. இதனால் வாழ்நாள் முழுவதும் மூளையின் நினைவாற்றல் மற்றும் கற்கும் திறன் சிறப்பாக இருக்கும்.

எதிர்காலத்தில் ரத்த ஓட்டம், டென்ஷன், சர்க்கரை நோய் உள்ளிட்ட பாதிப்புகள் வராமலும் தடுக்கிறது. அது மட்டுமின்றி, கர்ப்ப காலத்திலும் பிரசவத்தின்போதும் தாய்க்கு நோய்த் தொற்று ஏற்படாமல், வருங்காலத்தில் மார்பகப் புற்றுநோய் வராமலும் கோலைன் காப்பாற்றுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்..
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum