சசி படத்தில் நடிக்க பட்டினி கிடந்தேன்: பரத்
Page 1 of 1

தமிழ் சினிமாவில் நடிகர்கள் தாங்கள் நடிக்கும் எந்தவொரு காட்சியும் தத்ரூபமாக இருக்கவேண்டும் என்பதற்காக ரிஸ்க் எடுத்து நடிக்கவும் தயாராகிவிட்டார்கள். நடிகர்கள் கமல், சூர்யா, அஜீத் ஆகியோர் கதாபாத்திரத்திற்கும், கதைக்கும் தேவையான உடலமைப்பை கூட்டியும், குறைத்தும் தங்களது கதாபாத்திரங்களை மெருகேற்றி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது நடிகர் பரத்தும் இணைந்துள்ளார்.
நடிகர் பரத் இயக்குனர் சசி இயக்கி வரும் ‘555’ என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்திற்காக வெளியிடப்பட்ட போஸ்டர்களை பார்க்கும்போதே, இப்படத்திற்காக பரத் எவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார் என்பது தெரிகிறது.
இந்த படத்தில் இவர் மூன்று விதமான தோற்றத்தில் வருகிறாராம். அதாவது, சாக்லேட் பாய் போன்றொரு கதாபாத்திரம், தாடி, மீசை மற்றும் நீளமான தலைமுடியுடன் கூடிய கதாபாத்திரம், மற்றொன்று மொட்டை தலையுடன் கூடிய கதாபாத்திரமாம்.
இதுகுறித்து பரத் கூறும்போது, இயக்குனர் சசி இயக்கும் ‘555’ படத்திற்காக கடந்த ஒரு வருடமாக தாடி, மீசை மற்றும் தலைமுடியை நீளமாக வளர்த்து வந்தேன். வாழ்க்கையை பறிகொடுத்தது போன்ற தோற்றம் வரவேண்டும் என்பதற்காக நெடுநாட்கள் பட்டினி கிடந்தேன். கடந்த ஒரு வருடமாக சரியான சாப்பாடு கிடையாது.
தற்போது, மொட்டையுடன் தோன்ற வேண்டும் என்பதற்காக தாடி, மீசை, தலைமுடியை எடுத்துவிட்டு மொட்டை போட்டுக்கொண்டேன். ஒரு நோயாளி போன்ற தோற்றம் வேண்டும் என்பதற்காக, மொட்டை போடுவதற்கு இரண்டு நாட்கள் முன்பே தண்ணீர் குடிப்பதைக்கூட நிறுத்தி விட்டேன். இதனால் 75 கிலோவாக இருந்த எனது எடை 64 கிலோவாக குறைந்துவிட்டது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நடிகை ஆவதற்காக பட்டினி கிடந்தேன்: நந்திதா பேட்டி
» அமீர் படத்தில் பரத்!
» தமிழ் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டும் சுதீப்
» இந்தி படத்தில் கவர்ச்சியாக நடிக்க த்ரிஷா டபுள் ஓகே
» கோச்சடையான் படத்தில் அசின் நடிக்க எதிர்ப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum