தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அர்ப்பணிப்பு, கடின உழைப்பால் ஜெயிக்கலாம்-புதுநடிகர்கள் ரஜினி, கமலை பின்பற்ற வேண்டும்: சமந்தா

Go down

அர்ப்பணிப்பு, கடின உழைப்பால் ஜெயிக்கலாம்-புதுநடிகர்கள் ரஜினி, கமலை பின்பற்ற வேண்டும்: சமந்தா Empty அர்ப்பணிப்பு, கடின உழைப்பால் ஜெயிக்கலாம்-புதுநடிகர்கள் ரஜினி, கமலை பின்பற்ற வேண்டும்: சமந்தா

Post  ishwarya Sat May 04, 2013 6:00 pm


நடிகை சமந்தா ஐதராபாத்தில் அளித்த பேட்டி வருமாறு:-

நடிகர், நடிகைகளுக்கு கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் அவசியம். நூறு படங்களில் நடித்து விட்டு நூற்றியொன்றாவது படத்தில் நடித்தாலும் அந்த படத்தை தனது முதல் படமாக நினைக்க வேண்டும். நான் அப்படித்தான் கருதுகிறேன். ஒவ்வொரு படத்தையும் என்னுடைய முதல் படமாகவே எடுத்துக் கொள்கிறேன்.

ரஜினி, கமல் போன்றோர் ஒவ்வொரு படத்திலும் அர்ப்பணிப்போடு ஒன்றி நடிக்கின்றனர். கேரக்டர்களை நேசிக்கிறார்கள். அதனால் தான் இந்த அளவுக்கு உயர்ந்து இருக்கிறார்கள். புது நடிகர், நடிகைகள் ரஜினி, கமலை பின்பற்ற வேண்டும். அவர்களை பாடமாக எடுத்துக்கொண்டு அப்படி நடந்தால் ஜெயிக்கலாம்.

நடிப்பு என்பது சமுத்திரம் மாதிரி. புதிய சவால்கள் இருந்து கொண்டே இருக்கும். ஒரு படம் நன்றாக ஓடினால் கர்வம் படக்கூடாது. விருது பெற்ற நடிகைகள் தங்களை சிறந்த நடிகைகள் என்று கூறிக் கொண்டால் கேட்பவர்கள் சிரிப்பார்கள். என்னை நான் பெரிய நடிகை என்று சொல்லிக் கொள்வது இல்லை.

நான் நடித்த படங்கள் வெற்றி பெறுவதற்கு இயக்குனர்கள் தான் காரணம். அதோடு என் அதிர்ஷ்டமும் இருக்கிறது. என்னை நான் சிறந்த நடிகை என்று ஒரு போதும் சொல்ல மாட்டேன்.

இவ்வாறு சமந்தா கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum