கர்ப்பிணிகளின் காலணி
Page 1 of 1
கர்ப்பிணிகளின் காலணி
கர்ப்பிணிகள் நாவல் பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாக பிறக்கும் என்பதும், குங்குமப் பூ சாப்பிட்டால் சிவப்பாக பிறக்கும் என்பதும் மூடநம்பிக்கையே. பூவோ, பழமோ தோலின் நிறத்தை நிர்ணயிப்பது இல்லை. மெலனின் என்ற பொருளே நிறத்தை நிர்ணயிக்கிறது. கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம்.
உடல் காரணங்களால் மட்டுமல்ல உணர்சிசிவசப்படுவதாலும் உடலை பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது. தாய்லாந்தில் கர்ப்பிணிகளின் தினசரி உணவில் வாழைப்பழம் கண்டிப்பாக இருக்கும். கர்ப்பிணி பெண்கள் காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமல் இருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.
காலணிகளை வாங்கும் போது உங்கள் கால் அளவை சரியாக தெரிந்து கொண்டு அதற்குப் பொருத்தமான, அதிக உயரமில்லாத குதிகால் செருப்புகளை தேர்ந்து எடுங்கள். பிரவலமாக கம்பெனி பெயர் மற்றும் செருப்பின் புற அழசில் மயங்கி உங்கள் கால் அளவிற்கு பொருந்தாத குதிக்கால் செருப்புகளை ஒரு போதும் வாங்காதீர்கள்.
பகல் முழுவதும் நீங்கள் நடந்து வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பும்போது உங்கள் கால் சற்று வீக்கத்துடன் காணப்படும். எனவே நீங்கள் செருப்பு வாங்க காலை நேரத்தை விட மாலை நேரம் பொருத்தமானது. நீங்கள் உயரமாக தெரிய வேண்டும் என்பதற்காக குதிகால் உயரமாக செருப்புகளை வாங்காதீர்கள்.
கர்ப்ப கால்த்தில் உயரமான செருப்பு ஆபத்தானது. 2 அங்குவ உயலம் கொண்ட குதிகால் செருப்புகளே பாதுகாப்பானது. தோல் செருப்புகளே ஈரத்தை உற்ஞ்சும் தன்னை கொண்டவை. அவை தான் காலிற்கு காற்றோட்டமாக அமைந்து பாதுகாப்பு தரும். செருப்பின் முன் பகுதி முழுவதும் மூடி இருக்காமல் ஆங்காங்கே காற்று புகும் படி திறந்த வெளியாக இருக்க வேண்டும்.
அழகை விட பாதுகாப்பாக உடல் ஆரோக்கியம் முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். செருப்பு காலில் நன்றாக பொருந்தும் வண்ணம் வடிவமைப்பு பெற்றிருக்க வேண்டும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum