தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகர்கள் ஜெய், சத்யன் வீடுகளில் முற்றுகை: சிவாஜி ரசிகர் மன்றம் அறிவிப்பு

Go down

 நடிகர்கள் ஜெய், சத்யன் வீடுகளில் முற்றுகை: சிவாஜி ரசிகர் மன்றம் அறிவிப்பு  Empty நடிகர்கள் ஜெய், சத்யன் வீடுகளில் முற்றுகை: சிவாஜி ரசிகர் மன்றம் அறிவிப்பு

Post  ishwarya Sat May 04, 2013 4:32 pm

சிவாஜி கணேசன், பத்மினி, தேவிகா நடித்து 1966-ல் ரிலீசான பக்தி படம் ‘சரஸ்வதி சபதம்’. ‘அகர முதல எழுத்தெல்லாம், தெய்வம் இருப்பது எங்கே, கல்வியா செல்வமா வீரமா, கோமாதா எங்கள் குலமாதா, தாய் தந்த பிச்சையிலே பிறந்தேன் அம்மா போன்ற இனிய பாடல் இப்படத்தில் இடம் பெற்றுள்ளன.

‘சரஸ்வதி சபதம்’ பெயரில் தற்போது புதுபடம் தயாராகிறது. இதில் ஜெய் கதாநாயகனாக நடிக்கிறார். சத்யன், வி.டி.வி. கணேஷ் உள்ளிட்ட காமெடி நடிகர்களும் நடிக்கின்றனர். கே.சந்துரு இப்படத்தை இயக்குகிறார்.

‘சரஸ்வதி சபதம்’ தலைப்பை ஜெய் படத்துக்கு வைத்து இருப்பதற்கு சிவாஜி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். சிவாஜி ரசிகர் மன்ற தலைவர் கே.வி.பி. பூமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சிவாஜி நடித்த காலத்தால் அழிக்க முடியாத காவிய படைப்பு ‘சரஸ்வதி சபதம்’. அந்த தலைப்பில் புதுப்படம் எடுப்பது அதில் நடித்த கலைஞர்களை அவமதிப்பதாகும். ஏற்கனவே விவேக் சிவாஜியின் அப்பர் வேடத்தில் நடித்ததை எதிர்த்தோம். அவர் திருத்தி கொண்டார். புது படத்துக்கு சரஸ்வதி சபதம் பெயர் வைக்ககூடாது மீறி வைத்தால் அதில் நடிக்கும் ஜெய், சத்யன் உள்ளிட்டோர் வீடுகளில் முற்றுகை போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.

சிவாஜி சமூக நல பேரவை தலைவர் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் சிவாஜி நடித்த புராண இதிகாச படங்களின் தலைப்புகளை புதுப்படங்களுக்கு சூட்டக்கூடாது. உத்தமபுத்திரன், கவுரவம், இருவர் உள்ளம், தலைப்புகள் பயன்படுத்துவதை எதிர்க்கவில்லை. ‘திருவிளையாடல்’ தலைப்பு வைக்க எதிர்த்தோம். அதை திருவிளையாடல் ஆரம்பம் என மாற்றினர்.

இப்போது ‘சரஸ்வதி சபதம்’ தலைப்பு புதுப்படத்துக்கு சூட்டப்பட்டு உள்ளது. கோவில் திருவிழாக்களில் இன்றும் சரஸ்வதி சபதம் வசனம் ஒளிபரப்பப்படுகிறது. இதே பெயரில் காதல் காமெடி படம் எடுப்பது இந்து தெய்வங்களையும், சிவாஜியையும் அவமதிக்கும் செயல் எனவே தலைப்பை மாற்றகோரி கோர்ட்டுக்கு செல்வோம் என்று குறிப்பிட்டு உள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum