பெண்களைத் தாக்கும் 5
Page 1 of 1
பெண்களைத் தாக்கும் 5
ஒவ்வொரு குடும்பத்தின் அச்சாணியாகத் திகழ்பவர்கள் பெண்களே. எனவே அவர்கள் தங்களுக்காகவும், தமது குடும்பத்துக்காகவும் தம் உடல்நலத்தைப் பேண வேண்டும். பெண்களைப் பெரிதும் பாதிக்கும் 5 வியாதிகள் இவை என்று மருத்துவ நிபுணர்கள் பட்டியலிடுகிறார்கள்...
1 மார்பகப் புற்றுநோய்..... இரவு ஷிப்ட்களில் பணிபுரியும் பெண்களுக்கு மற்ற பெண்களை விட மார்பகப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் நான்கு மடங்கு அதிகம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இரவில் பணிபுரிவது, உடல் கடிகாரத்தை திரும்பிச் சுழலச் செய்கிறது. அது, உடலில் மெலட்டோனின் ஹார்மோன் அளவை மாற்றுகிறது, மார்பக செல் வளர்ச்சிக்கான ஹார்மோன்களை பாதிக்கிறது.
2 உடல் பருமன்..... உட்கார்ந்தே வேலை செய்யும் பெண்களுக்கு உடல் பருமன் கூடும்போது, அது சர்க்கரை நோய், மனஅழுத்தம், மூட்டுப் பிரச்சினைகள், பாலிசிஸ்டிக் ஒவேரியன் டிசீஸ் போன்ற வேறு சில வியாதிகளை அழைத்து வந்துவிடுகிறது. விளம்பரங்களில் கூறப்படுவதைப் போல, உடல் பருமனைக் குறைக்க குறுக்கு வழிகள் எல்லாம் கிடையாது. ஆரோக்கியமான உணவுமுறையும், நடை, நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் போன்ற பயிற்சிகளும்தான் உதவும்.
3. தூக்கமின்மை.... சீரற்ற ஷிப்ட்கள், இரவில் வெகு நேரம் கண்விழித்துப் பணிபுரிவது, கணினியில் பணிபுரிவது போன்றவை அதிக மனஅழுத் தத்தை ஏற்படுத்தி, பெண்களின் தூக்கத்தைத் துரத்தி விடுகின்றன. தியானமும், இரவில் படுக்கப்போகும் முன்மிதமான சூட்டில் பால் அருந்துவதும் இன்சோம்னியாவுக்கு (தூக்கமின்மை) தீர்வாக அமையும்.
4. செர்விக்கல் ஸ்பான்டிலோசிஸ்.... கழுத்தை ஒட்டிய தண்டுவடத்தைப் பாதிக்கும் இந்த வியாதி, ஒழுங்காக அமராதது போன்றவற்றால் ஏற்படுகிறது. இதில், தசைகள் இறுக்கமாகி, கழுத்துத் தண்டுவடம் பாதிக்கப்படுகிறது. தோள்பட்டை மற்றும் கழுத்துக்கு உரிய பயிற்சிகள் செய்வதன் மூலம் தசைகள் தளர்வடையும், வலி விடைகொடுக்கும்.
5. எண்டோமெட்ரியோசிஸ்.... பணிபுரியும் பெண்கள் வியாதி என்று கூறப்படும் இந்நோய், மிகவும் நெருக்கடியான வாழ்க்கைமுறையில் உள்ள பெண்களைப் பாதிக்கிறது. இதில் கர்ப்பப்பை அடுக்கில் உள்ள திசுக்கள், உடம்பின் பிற பாகங்களுக்கு இடம்பெயர்கின்றன.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெண்களைத் தாக்கும் இதய நோய்
» பெண்களைத் தாக்கும் அச்சங்கள்!
» பெண்களைத் தாக்கும் உடல் உபாதைகள்
» புதிய பெண்களைத் தேடினால்...!?
» புதிய பெண்களைத் தேடினால்...!?
» பெண்களைத் தாக்கும் அச்சங்கள்!
» பெண்களைத் தாக்கும் உடல் உபாதைகள்
» புதிய பெண்களைத் தேடினால்...!?
» புதிய பெண்களைத் தேடினால்...!?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum